தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

சந்திரிக்கா, மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோருக்கு உயிராபத்து?- ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கு ராஜபக்ஷ அரசு!

வெள்ளவத்தையில் நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 10:02.07 AM GMT ]
வெள்ளவத்தையில் நபா் ஒருவர் தனக்குத் தானே தீமுட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெள்ளவத்தை ஹார்மர்ஸ் லேனில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.
46 வயதான நபர் ஒருவரே தனது உயிரை மாய்த்துள்ளார்.
என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.
தனிப்பட்ட காரணங்களினால் இவ்வாறு தீக்குளித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
வெள்ளவத்தையில் ஒருவர் தீயிட்டு தற்கொலை
கொழும்பு வெள்ளவத்தையில் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
46 வயதான இந்த நபர் தனது மனைவியின் அலுவலகத்திற்கு எதிரில், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjtz.html
சந்திரிக்கா, மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோருக்கு உயிராபத்து?- ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கு ராஜபக்ஷ அரசு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:13.29 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோர் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பது குறித்து புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ள போகும் பயங்கரமான விபத்தொன்று குறித்த தகவலையே தாம் இவ்வாறு அறிய தந்ததாக அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரி கூறியுள்ளார்.
மாதுளுவா சோபித தேரர் கடந்த 22 ஆம் திகதி வாகன விபத்தொன்றை சந்தித்தமை திடீரென நடந்த சம்பவம் அல்ல எனவும் அது பயங்கரமான விபத்தை ஏற்படுத்துவதற்கான முன் பயிற்சி எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சரான ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணமும் இவ்வாறு சதித்திட்டம் போட்டு மேற்கொள்ளப்பட்ட விபத்து என தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார் என்ற செய்திகள் இராணுவ புலனாய்வு பிரிவின் ஆலோசனைக்கு அமையவே முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்னும் விடுதலைப் புலிகளின் இலக்கில் இருப்பதாக காட்டுவதே இதன் நோக்கம்.
முன்னாள் ஜனாதிபதிக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவரை கொலை செய்து விடுதலைப் புலிகளே அதற்கு காரணம் என காட்டுவதற்காக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் ஆலோசனையின்படி சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
அத்துடன் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளான மங்கள சமரவீர மற்றும் கலாநிதி ஹர்ச டி சில்வா ஆகியோர் தொடர்பிலும் இந்த குழுக்கள் விசேட கவனத்தை செலுத்தியுள்ளன என்றும் அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறியுள்ள இணையத்தளங்களை நடத்தி வரும் சில ஊடகவியலாளர்களை இந்த குழுக்கள் கண்காணித்து வருகின்றன.
லண்டனில் தஞ்சமடைந்துள்ள லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீர, தி இண்டிபென்டன் ஆசிரியர் சுபாஸ் ஜயவர்தன ஆகியோர் இவர்களில் பிரதான இலக்காகும்.
லண்டனில் இருந்து பதிவேற்றப்படும் இணையத்தளங்களின் தகவல்களை சேகரிப்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜர் ஆர்.பீ.டி.பத்திரண என்ற அதிகாரியை எதிர்வரும் 23ம் திகதிக்கு பின்னர் லண்டனில் களமிறக்க ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதத்தை பயன்படுத்தி ஆட்சியை தக்கவைக்க முயற்சிக்கு ராஜபக்ஷ அரசு
கவிழ்ந்து வரும் ராஜபக்ஷ அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்தி தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ராஜபக்ஷவினரின் இந்த நடவடிக்கைகளுக்கு சில சர்வதேச நாடுகளும் உதவி வருவதை சர்வதேசத்தில் அண்மையகாலமாக நடந்து வரும் சம்பவங்களை நோக்கும் அறியமுடிகிறது எனவும் அவர் கூறினார்.
இனவாதத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கையில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனங்களின் சிறிய பிரச்சினைகளை மிகப் பெரிய பிரச்சினையாக மாற்றி, அந்த பிரச்சினையை மோதலாக மாற்றி அரசியல் இலாபம் முயற்சியில் சர்வதேசம் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது.
குறிப்பாக பாகிஸ்தான், யுக்ரைன், பலஸ்தீனம், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த நிலைமையை காணமுடிகிறது.
இப்படியான பிரிவினைவாத, அடிப்படைவாத அரசியலை தோற்கடிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
கிளிநொச்சி முதல் அம்பாந்தோட்டை வரையுள்ள சகல நகரங்களிலும் உள்ள இந்து ஆலயங்கள், பௌத்த விகாரைகள், கத்தோலிக்க தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் இனவாதமோ மதவாதமே ஏற்படக் கூடாது என்று பிரார்த்தித்து எமது கையெழுத்து பெறும் பனரின் கையெழுத்திட்டனர்.
1983 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் தலையிட்டு பற்ற வைத்த இனவாத தீ, பிற்காலத்தில் மூன்று தசாப்த கால கொடூரமான யுத்தமாக மாறியது.
யுத்தத்தின் பிரதிபலனாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். மன்னார் மற்றும் காத்தான்குடியில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்.
மீண்டும் இவ்வாறான துரதிஷ்டவசமான நிலைமையை ஏற்படுத்த இன்றைய அரசாங்கத்தின் சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தை பெற்ற இனவாதிகள் சிலர் தற்போது இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.
இந்த இனவாதிகள் மூலம் மோதலான நிலைமையை ஏற்படுத்தி பின்னர் அதனை பயன்படுத்தி, மத அமைப்புகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றை அடக்க நடவடிக்கை எடுக்கப்படலாம். அரசாங்கம் அதனை மேற்கொண்டு வருகிறது எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjt1.html

Geen opmerkingen:

Een reactie posten