தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

இலங்கையின் அராஜக போக்கைக் கண்டித்து பிரிட்டிஸ் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு!

மாணவர்களை மன்னியுங்கள்: ரஜரட்ட பல்கலை உபவேந்தருக்கு ஜனாதிபதி ஆலோசனை
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:44.34 AM GMT ]
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விரைவாக பல்கலைக்கழகத்தை திறக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட இணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தனவிற்கு இந்த ஆலோசனை வழங்கினார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உபவேந்தர் உட்பட விரிவுரையாளர்களை ஒரு நாள் முழுவதும் அவர்களின் அலுவலகத்தில் சிறை வைத்தனர்.
இது தொடர்பான வழக்கொன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற இணைப்புக்குழுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதால், 95 வீதமான மாணவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
சட்டத்தை கையில் எடுக்க மாணவர்களை அனுமதிக்க முடியாது. அவர்கள் கற்பதையே செய்ய வேண்டும். தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது கடவுளின் குணம். இதனால் மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கி மீண்டும் பல்கலைக்கழகத்தை திறங்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இதற்கு முன்னர் சுமார் 200 மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjt2.html

இலங்கையின் அராஜக போக்கைக் கண்டித்து பிரிட்டிஸ் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 11:52.47 AM GMT ]
தமிழின வரலாற்றில் ஆறாத ரணமாகிப் போன கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவு நாளான நேற்று முன்தினம் சிங்களப் பேரினவாத அரசின் அராஜகத்தை எதிர்க்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமானது எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு சிங்கள அராஜகங்களை வெளிப்படுத்தி, அதற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
மாலை 4:00 மணியளவில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பு ஆரம்பமாகிய இந்நிகழ்வில்,
1. தமிழரின் பூர்வீக நிலங்கள் சிங்கள அரசால் அபகரிக்கப்படுதல்
2. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் யுத்த சாட்சிகளை பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்துதல்
3. தாயகத்தில் கேட்பாரற்று தொடர்ந்து இடம்பெறும் கைதுகள் மற்றும் படுகொலைகள்
4. இலங்கை, தன் மீதான சர்வதேச விசாரணைகளைத் தடுத்தல்
5. இலங்கையில் உண்மை நிலவரங்கள் வெளிவரா வண்ணம் பத்திரிகையாளார்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தல்
6. சிங்கள அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீது கொண்டு வந்த தடை
போன்ற இலங்கை அரசின் அராஜக போக்கைக் கண்டித்து பதாகைகளைத் தாங்கியும் கோசங்களை எழுப்பியும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் இவ் விடயங்கள் உள்ளடக்கப்பட்ட காட்சிப்படுத்தலும் இதன்போது இடம்பெற்றது.
பிரித்தானியத் தமிழர் பேரவை, அரசியல் இராஜதந்திர ரீதியாக நகர்வுகள் மூலம் மகிந்த ராஜபக்ச இங்கு வருவதற்கு பலமான எதிர்ப்பைக் கொடுத்திருந்தது.
உள்நாட்டுப் பிரச்சினை என்று வெளி நாடுகளைத் தலையிடாமல் வைத்து தமிழர் மீதான இன அழிப்பைத் தொடர்ந்து வந்த சிங்கள தேசம் முதல் தடவையாக 83 கறுப்பு ஜுலையில்தான் சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனது.
உலகை உலுக்கிய கறுப்பு ஜுலை வழமை போல் இவ் வருடமும் லண்டன் மாநகரில் எழுச்சியுடன் நடை பெற்றது.
இவை தொடர்பான மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வேற்றின மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாலை 6:55 மணியளவில், படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து கரங்களில் சுடரேந்தி அகவணக்கம் செலுத்தி இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjt3.html

Geen opmerkingen:

Een reactie posten