தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பார்க்கும் தஞ்சக் கோரிக்கையாளர்கள்- அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை!

போர்க்குற்ற விசாரணை! அரசின் நிலைப்பாட்டில் ஏன் திடீர் மாற்றம்?- ஐ.தே.க கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 12:30.35 PM GMT ]
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்திற்கான காரணமென்ன என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழு ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
ஆலோசனைக் குழுவின் தலைவராக சட்டத்தரணி டெஸ்மன் டீ சில்வாவும், சட்டத்தரணி ஜெஃப்றி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகிய இருவரும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி விசாரணைக்குழு தற்போது யுத்த கால இழப்புக்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை அவசியமற்றது என அறிவித்து வந்த அரசாங்கம், தனது நிலைப்பாட்டினை திடீரென மாற்றிக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தினை பகிரங்கப்படுத்த வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, படையினரைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை எனவும் தேவை ஏற்பட்டால் தாமே மின்சார நாற்காலி தண்டனையை அனுபவிக்கப் போவதாகவும் தேர்தல் காலங்களில் கூறியிருந்தமையை ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், தற்போது அமைச்சரவையின் அனுமதியைப் பெறாமலே நிபுணர் குழுவினை ஜனாதிபதி நியமித்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckp7.html


மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பார்க்கும் தஞ்சக் கோரிக்கையாளர்கள்- அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 01:18.43 PM GMT ]
நடுக்கடலில் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 153பேரும் கடுமையாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் சர்வதேச எல்லைக்கு அப்பால் 25 கிலோ மீற்றர் சென்று நடுக் கடலில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி முதல் இன்று வரை படகில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சூரிய ஒளியை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கமும் இதனை அந்நாட்டு நீதிமன்றில் உறுதி செய்துள்ளது.
காலநிலை சீராக இருந்தால் உணவு வேளைகளின் போது மட்டும் சூரிய வெளிச்சத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவதாகவும் மற்றைய நேரங்களில் காற்று கூட போகாத யன்னல்கள் அற்ற அறைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறு குழந்தைகளும் புகலிடக் கோரிக்கையாளர் படகில் தங்கியிருப்பதனால் படகில் பூரண சுதந்திரம் வழங்குவது ஆபத்தானதாகும் எனவும், படகில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை கால வரையறையின்றி தடுத்து வைப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. அவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தமையினால் எமது சட்டங்களை தளர்த்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியக் கடற்பரப்பிற்குள் வைத்து குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்படவில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது.
நடுக்கடலில் அடைத்து வைத்துள்ள அகதிகளின் உயிர்களுக்கு சர்வதேசம் உதவிக்கரம் நீட்டுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது.
இந்தியாவில், புதுச்சேரிக்கு அருகே உள்ள கீழ்ப்புத்துப்பட்டு என்ற கிராமத்திலும், பிற சில அகதிகள் முகாம்களில் இருந்தும் சுமார் 153 இலங்கை அகதிகள் படகில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்று நடுக்கடலில் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று புதுடெல்லிக்கு விஜயம் செய்து, அகதிகள் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஜூன் மாதம் 157 அகதிகளை ஏற்றி சென்ற படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவத்தை இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
இந்தியாவிற்குள் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக யாரும் குடிபுகுவதையோ, அல்லது இந்தியாவிலிருந்து யாரும் சட்டவிரோதமாக குடியகல்வதையோ இந்திய அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தவிர, இந்தப் பிரச்சினை சட்டரீதியாகவும், மனிதாபிமான ரீதியிலும் கையாளப்பட வேண்டும் என்றும், சிறுவர்கள் உட்பட எவருக்கும் எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது ஸ்கொட் மொரிசனிடம் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten