தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

இந்தியத் தளபதி வரமுன், சீனாவுக்கு களவாக சென்ற இலங்கை விமானப்படைத் தளபதி…

இருளில் உள்ள அகதிகளை 3 மணிநேரம் வெளிச்சத்தில் நடமாட அவுஸ்ரேலியா அனுமதி

இந்த அகதிகள் தொடர்பான வழக்கு இன்று மெல்பேர்னில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசனின் இந்த அறிக்கை, அவரது சட்டவாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக இந்தக் கப்பலில் 153 அகதிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய அறிக்கையில் 157 தமிழ் அகதிகள் அதில் இருப்பதாகவும், அவர்களில் மூவர் ஆங்கிலத்தில் பேசக் கூபடியவர்களாக இருப்பதால், மொழிபெயர்ப்பாளர்களாக செயற்படுவதாகவும், அவுஸ்ரேலிய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி அளித்த காலக்கெடு முடிவடைந்து, 19 மணிநேரம் கழித்தே, இந்த 14 பக்க அறிக்கையை அவுஸ்ரேலிய அரசு சமர்ப்பித்துள்ளது. இதற்காக, அரசதரப்பு சட்டவாளர் நீதிபதியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
சுங்கக் கப்பலின் மூன்று அறைகளில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், குடும்பங்கள் பிரிந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உணவுக்காக மட்டும், நாளொன்றுக்கு 3 மணிநேரம், அறைகளை விட்டு வெளியே வந்து இயற்கை வெளிச்சத்தில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அரசின் அறிக்கை கூறுகிறது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களை கப்பலில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியவில்லை என்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் நிதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77008.html

இந்தியத் தளபதி வரமுன், சீனாவுக்கு களவாக சென்ற இலங்கை விமானப்படைத் தளபதி…

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக கடந்த வாரத்துக்கு முந்திய வாரம், சீனாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணம் குறித்த தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாக வைத்திருந்தது. இதன்போது, கடந்த 10ம் நாள் மாலை 6.30 மணியளவில், சிறிலங்கா விமானப்படைத் தளபதி, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படைத் தளபதி ஜெனரல் மா சியாவோதியனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களின் போதே, இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், சீனக்குடாவில், சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத்தாபனம், அமைக்கவுள்ள விமானப் பராமரிப்பு நிலையம் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதுதொடர்பாக, சிறிலங்கா விமானப்படைத் தளபதி, சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத்தாபனத்துக்கும் சென்று பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். இது சீனாவின் பாதுகாப்பு உற்பத்திகள் மற்றும் விமான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்ட 34 விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொண்டுள்ளது. இவற்றை இந்த நிறுவனமே பராமரித்து வருகிறது. இந்த நிறுவனமே தனது விமானப் பராமரிப்புத் தளம் ஒன்றை சீனக்குடாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா விமானப்படைத் தளபதி பேச்சு நடத்திய விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் மூடி மறைத்திருந்தது. கடந்த வாரம், இந்திய விமானப்படைத் தளபதி, சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையிலேயே, இந்த தகவலை சிறிலங்கா அரசாங்கம் வெளியே விட்டுள்ளது. ஜெனரல் மா சியாவோதியன், கடந்த 2011ம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Kolitha-Gunatilleke
http://www.jvpnews.com/srilanka/77011.html

Geen opmerkingen:

Een reactie posten