தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு! - காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு!

14வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்: மக்கள் ஆர்ப்பாட்டம்- சந்தேக நபர் பொலிஸில் சரண்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 06:52.27 AM GMT ]
பொகவந்தலாவ பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் 14 வயதுடைய சிறுமி ஒருவர், 60 வயதுடைய சிங்களவரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவ்விடயத்தை வெளியில் சொன்னால், தன்னையும், குடும்பத்தையும் கொன்று விடுவதாக பயமுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவிப்பதோடு, லிந்துலை பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போது பொலிஸ் விசாரணை இடம்பெற்று வருவதுடன், சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாக தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தே இன்று காலை 10 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து தோட்ட மக்களும் வேலைக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இரண்டாம் இணைப்பு
இறக்குவானை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை கைது செய்யுமாறு கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, அக்கரப்பத்தனை, தலவாக்கலை,இ டிக்கோயா, நோர்வூட், ஆகிய பிரதேசங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களும் இணைந்து சந்தேக நபரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20.07.2014 அன்று இறக்குவானை டெல்வின் தோட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வீட்டின் வெளிப்புற பிரதேசமொன்றில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
சந்தேகநபரை பொதுமக்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்டியும் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்: அஜித் ரோஹண
இறக்குவானை – டெல்வின் தோட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இறக்குவானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் அவரை பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொது மக்களால் அடையாளம் காட்டப்பட்ட போதும் பொலிஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLcko4.html


காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு! - காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 08:53.54 AM GMT ]
 மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு
காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீட்டினுள் இனந் தெரியாதோர் நுழைந்து முக்கிய ஆவணங்களை எரித்து நாசப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் எழுதுமட்டுவாள் பகுதியில் உள்ள சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரான இராசையா தெய்வேந்திரம்பிள்ளை என்பவரது வீட்டிலேயே இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தது.
இந்நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் காணி அளவீட்டினை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கில் மக்களோடு நின்று தனது ஆதரவையும் வழங்கியதுடன் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டு குறித்த உறுப்பினர் வீடு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஆவணங்கள் உள்ளிட்ட பையொன்று எடுக்கப்பட்டு வீட்டுக்கு மேற்குப்புறத்தில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வ்

Geen opmerkingen:

Een reactie posten