தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

இலங்கையுடன் சிறந்த உறவைப் பேண மோடி விருப்பம்: சுப்பிரமணியன் சுவாமி

எம்.எச்-17 என்ற மலேசிய விமானக் குறியீடு எம்.ஐ-17 என கிளர்ச்சியாளர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டதா?
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 02:43.15 PM GMT ]
உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மலேசிய விமானத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணமேயுள்ளன.
இது பற்றிய விரிவாக ஆராய்வதற்காக லங்காசிறி வானொலி கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மாவை, தனது நிகழ்ச்சியில் இணைத்துக் கொண்டது.

அவர் வெளியிட்ட கருத்துக்களில்,
உக்ரைனின் கிளர்ச்சியாளர்களாலேயே ஏவப்பட்டதாக நம்பப்படும், கனரக வாகனங்களில் பொருத்தப்பட்ட ஏவுகணை ஏவப்பட்டு 40 செக்கன் நேரத்திலேயே பறந்து கொண்டிருந்த விமானத்தை அது தாக்கியழித்திருக்கும்.
விமானம் வெடித்துச் சிதறியுள்ளதால் சிதைவுகள் 9 மைல் சுற்றாடல் முழுவதுமாக வீழ்ந்திருக்கின்றன.
குறிப்பாக பொதுமக்கள் விமானம் வானிலேயே பல துண்டுகளாகி வீழ்ந்ததைக் கண்ணுற்றிருக்கிறார்கள். ஒரு கோரமான செயலாக இன்றைய திகதியில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
ரஸ்யா, உக்ரைன் நாடுகளில் எம்.ஐ என்ற எழுத்துடன் தொடங்கும் விமான கலத் தாயரிப்புக்கள் பல உள்ளன.
எம். ஏச்-17 (MH 17 ) என்ற வார்த்தைக்கும் எம்.ஐ-17 என்கிற வார்த்தைக்கும்  இடையிலான தொடர்பாடலைக் கேட்ட கிளர்ச்சியாளர்களால் தவறாகப் புரியப்பட்டு விமானம் சில வேளைகளில் சுடப்பட்டிருக்கலாம்.
இஸ்ரேலிய விமான நிறுவனத்தின் சில விமானங்களைத் தவிர வேறு எந்த நாட்டுப் பயணிகள் போக்குவரத்து விமானங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை அறியும் கருவிகள் இல்லை.
எனவே இந்த விமானத்தின் விமானிகளுக்கோ அல்லது பயணிகளுக்கோ ஏவுகணை தாக்கப் போகின்றது என்பது தெரிய வந்திருக்காது போன்ற பல கருத்துக்களைத் அவர் தெரிவித்தார்.

இலங்கையுடன் சிறந்த உறவைப் பேண மோடி விருப்பம்: சுப்பிரமணியன் சுவாமி
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 04:23.47 PM GMT ]
இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, சுப்பிரமணியம் சுவாமி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நிறைவடைந்தமை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று என்றும் சுவாமி தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடல்வள சுற்றாடல் கற்கைக்கான நிலையம் ஒன்றை நிறுவ இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவில் பாரதீய ஜனதாக்கட்சியின் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் சுரேஸ் பிரபு, ஊடகவியலாளரும் வர்ணனையானருமான மாதவன் நலபாட் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten