தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

தமிழினம் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும்: பா.அரியநேந்திரன்

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க உள்நாட்டு செயல்முறையை ஆதரிக்கும் தன்சானியா- ஜேர்மனிய சான்சிலரை இலங்கைத் தூதுவர் சந்திப்பு
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 12:54.19 PM GMT ]
உள்நாட்டு செயல் முறையின் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என தன்சானியா வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பேர்னாட் மெம்பே தெரிவித்துள்ளார்.
போருக்கு பின்னர் இலங்கை பெரும் முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வந்துள்ள தன்சானிய அமைச்சர், வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
இலங்கை போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு மற்றைய நாடுகளுக்கு மத்தியில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது.
மாற்றங்களை ஏற்படுத்தி காண்பிக்க 5 ஆண்டுகள் போதுமானதல்ல. 9 மாதங்களுக்கு முன்னர் நாங்கள் இலங்கைக்கு வந்திருந்தோம். 9 மாதங்களுக்கு பின்னர் இலங்கையின் மாற்றங்களை காண்கின்றோம் எனவும் தன்சானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் தன்சானியாவுக்கும் இடையில் மூன்று இரு தரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடப்பட்டன.
தென்னை ஆராய்ச்சி, அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதேவேளை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மதிப்புகள் மற்றும் அபிலாஷைகளை பகிர்ந்து கொள்வது பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் தன்சானியா சகல நேரங்களிலும் இலங்கை தொடர்பில் உண்மையாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனிய சான்சிலரை இலங்கைத் தூதுவர் சந்திப்பு
ஜேர்மனிக்கான இலங்கை தூதுவர் சரத் கோங்காகே, அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மேர்கெல் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிராங் வேல்டர் ஸ்ரான்மையர் சந்தித்துள்ளதாக பேர்லின் உள்ள இலங்கைத் தூதரகம் எமது செய்தி பிரிவுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பேர்லின் நடைபெற்ற இராஜதந்திர சமூகத்திற்கான ஆண்டு வரவேற்பு வைபவத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதவராக தனது பணி நிறைவடைந்துள்ளது பற்றி கோங்காகே, இந்த சந்திப்பின் போது ஜேர்மனிய சான்சலரிடம் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில், ஜேர்மனி இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவு மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தியமை தொடர்பில் இலங்கை தூதுவர் ஜேர்மனிய சான்சலர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்து கொண்டார்.
அதேவேளை சான்சலர் மேர்கல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பிராங் வேல்டர் ஸ்ரைன்மையர் ஆகியோர், இலங்கை தூதுவர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த மேற்கொண்ட விரிவான வேலைத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
குறிப்பாக ஜேர்மனி மற்றும் இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தென் ஆபிரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பெறுபேற்று செல்லும் சரத் கோங்காகேவுக்கு இரு தலைவர்களும் தனது புதிய பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் எனவும் அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRVLclv6.html#sthash.k5tk1XaB.dpuf

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வுக்கு செல்ல முடியும்: முன்னணி சட்டவாதி ஜயம்பதி விக்ரமரத்ன
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 01:25.12 PM GMT ]
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பதற்கான சிறந்த பிரவேசமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அமையும் என அரசியல் அமைப்பு தொடர்பான முன்னணி சட்டவாதியான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 25 வது சிரார்த்த தின உரையை நிகழ்த்துவதற்காக லண்டன் சென்றிருந்த போது பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலைகள் குறித்து கருத்து வெளியிட்ட விக்ரமரத்ன, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதை காண வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றாலும் இந்த சந்தர்ப்பத்தில் அது செயற்பாட்டு ரீதியானது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மேற்கொள்வதற்கான முதல் நடவடிக்கையாக ஜனநாயக சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் படிப்படியாக ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்றுக்கு செல்ல முடியும் எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தற்போது காணப்படும் சர்வதிகார போக்கின் மூலம் சகல சமூக உடன்பாட்டு ஒப்பந்தகளும் இரத்தாகி போயுள்ளன.

இந்த நிலைமையை சமநிலைமைக்கு கொண்டு வர இலங்கையில் ஜனநாயக சந்தர்ப்பத்திற்கான வெளிப்பாடுகளை திறக்க வேண்டியது அத்தியாவசியமானது.

ஆரம்பத்தில் தனிநாட்டுக்காக குரல் கொடுத்து பின்னர், அந்த நிலைப்பாட்டை மாற்றி அரசியல் தீர்வு ஒன்றுக்காக குரல் கொடுத்ததால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை விடுதலைப் புலிகள் கொலை செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவரது அரசியல் தொடர்பில் கவனத்தை செலுத்துவது, அரசியல் தீர்வு ஒன்றுக்காக குரல் கொடுத்து வரும் அதிகளவான தமிழ் மக்களின் அபிலாஷைக்கு மிகவும் முக்கியமானது.
தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவான நிலைப்பாடு இல்லை என்பது அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்காவின் உப ஜனாதிபதியின் பயணத்தில் நன்கு வெளிப்படையாக தெரிந்தது.
சர்வதேசத்தை மகிழ்விப்பதற்காக இந்த மாதிரியான பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் பயன் ஏதுமில்லை. இந்த பிரச்சினையை நாம் உள்நாட்டில் தீர்த்துக் கொள்ள முடியும். எனினும் அதற்கு அரசியல் அர்ப்பணிப்பு தேவை.
அதேபோல் இன்றைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொறுப்புகள் குறித்து எந்த வகையிலும் திருப்தி கொள்ள முடியாது எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRVLclwy.html#sthash.BALmDkOK.dpuf

இந்தியாவின் தம்பதிவவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தல்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 01:40.16 PM GMT ]
இந்தியாவின் தம்பதிவவுக்கு செல்லும் இலங்கை அடியார்கள் அங்குள்ள உண்டியலில் செலுத்திய சுமார் 20 தொன் இலங்கை நாணயங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளன.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார். சாதாரணமாக தம்பதிவவுக்கு வருடாந்தம் 200, 000 அடியார்கள் செல்கின்றனர்.
இதன்போது அவர்கள் இலங்கை நாணயங்களை உண்டில்களில் செலுத்துகின்றனர். எனினும் இந்த நாணயங்களால் தம்பதிவ நிர்வாகத்துக்கு பிரயோசனம் இல்லை.
எனவே அவற்றை இலங்கைக்கு எடுத்து வர இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பல மில்லியன் இலங்கை ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது.
எனவே தம்பதிவவுக்கு செல்லும் அடியார்கள் இலங்கை நாணயங்களை அங்குள்ள உண்டிலுக்குள் செலுத்த வேண்டாம் என்று கப்ரால் கோரியுள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRVLclwz.html#sthash.ieSH0vkk.dpuf
அபிவிருத்தி என்ற மாயைக்குள் விழாமல் இனத்தைக் காப்பதற்கு ஒன்றுபட வேண்டும்: அ.அமிர்தலிங்கம்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 04:27.34 PM GMT ]
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே எமது மக்களுக்கான அபிவிருத்தியினை செய்ய முடியும் என்று கூறுவது மடமைத்தனமாகும் என த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் கூறினார்.
நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது வித்தியாலய அதிபர் ச.சபாரெத்தினம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம், தமிழ்ப் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி ஜெகநாதன், ஓய்வு பெற்ற அதிபர் க.சந்திரலிங்கம், கூட்டுறவுச் சங்கத்தின் ஓய்வு பெற்ற பரிசோதகர் வ.குலசேகரம் மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
நாட்டில் உள்ள அனைத்து பாகங்களிலும் அபிவிருத்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். அதனை புரிந்து கொள்ள முடியாதவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்தால்தான் எமது மக்களுக்கான அபிவிருத்தியினை செய்ய முடியும் என கூறுவது அவர்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கே என்பதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டியது அரசியல்வாதிகள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அவர்கள் அந்த வசனத்தைக்கூறியே அரசாங்கத்தின் பக்கம் சென்றவர்கள் என்பதனை அவர்கள் மறந்துவிடக்கூடாது.
1965ஆம் ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் நாட்டிலே மாறிமாறி வந்த எந்த அரசாங்கங்களுடனும் சோரம் போகாமல் தனித்துவமான அரசியல் கட்சியாக இருந்து செயற்பட்டு, மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றோம். 
இலங்கை தமிழரசுக் கட்சியில் உள்ள தலைமைகள் காலத்திற்குக்காலம் மாறியிருக்கலாம. ஆனால் எந்தவிதத்திலும் எமது கொள்கைகள் மாறவில்லை. ஒரே கொள்கையுடன்தான் இன்றும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதன்காரணமாகத்தான் எமது தமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரைக்கும் எங்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்து வருகின்றார்கள்.
ஆகவே இனிவரும் காலங்களிலும் இந்த அரசாங்கம் கூறும் அபிவிருத்தி என்ற மாயைக்குள் வீழ்ந்து எமது தமிழ்த் தேசியத்தினை மறந்து செயற்படாமல் எஞ்சியிருக்கும் எமது இனத்தைக் காப்பதற்கு அனைத்து தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் எமது கட்சியை பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டடாயமாகும் என தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRVLclw5.html#sthash.bE7BWc7I.dpuf

தமிழினம் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும்: பா.அரியநேந்திரன்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 05:21.33 PM GMT ]
எமது பாராம்பரிய வரலாற்றினை நாம் மறப்போமாக இருந்தால் தமிழர்கள் என்ற இனம் ஒன்று இருந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் போய்விடும். அதற்காக தமிழர்கள் அரசியலை வரலாறாக பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கச்சக்கொடி சுவாமிமலையில் உள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைபாடுகளையும் காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் கேட்றிந்து கொண்டார்.
அங்குள்ள மக்களிடம் தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர்,
அபிவிருத்தி என்பது அந்த நாட்டை நிர்வகிக்கின்ற யாராவது செய்யக்கூடியதொன்று. ஆனால் சிலர் அதனை புரிந்து கொள்ளாமல் அரசியல் என்பது அபிவிருத்தி தான் என்று நினைக்கின்றார்கள்.
அபிலாசை என்பது அரசியலில் வரலாறு சார்ந்த விடயம். இந்த வரலாற்றை இல்லாமல் செய்வதற்காகவும் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்காகவும் தமிழர்களில் உள்ள சிலர் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய அரசியல் ஒன்று இருந்ததன் காரணமாகத்தான் இவ்வாறனவர்களை தமிழ் கதைக்க வைத்திருக்கிறது.
இன்று இலங்கை தீவில் வட,கிழக்கில் தமிழர்கள் என்ற இனம் இருக்கின்றதென்றாலோ, சர்வதேச ரீதியாக பேசப்படுகின்றதென்றாலோ அதற்கு முழு உரித்துடைய அரசியல் கட்சியாக செயற்பட்டுக்கொண்டு இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ்மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றவர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய ஒரு சக்தியாக இருப்பது த.தே.கூட்டமைப்பினர் மாத்திரம் தான். அதற்காக வேண்டித்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு த.தே.கூட்டமைப்பினர் வர வேண்டும் என்று ஜனாதிபதி தொடக்கம் சகல அமைச்சர்களும் கூறுகின்றார்கள். காரணம் த.தே.கூட்டமைப்பினரை ஒதுக்கிவிட்டு அபிவிருத்தி, அரசியல் எதனையும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
அண்மையில் அமைச்சுக்களில் மிகவும் முக்கியமான அமைச்சான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பசில் ராஜபக்ச, த.தே.கூட்டமைப்பினருடன் தனியாக பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார். இதில் இருந்து த.தே.கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்கின்றது என கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குபவர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.
வெறுமனே அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறும் அரசியல்வாதிகள், வடக்குக்கிழக்கில் ஆக்கிரமித்திருக்கும் இராணுவ முகாம்களையும், மாவட்டங்களில் உள்ள எல்லைக்கிராமங்களையும் குறிப்பாக புளுக்குணாவை, கெவிளியாமடு, கச்சக்கொடி சுவாமிமலை போன்ற இடங்களில் இடம்பெறும் குடியேற்றங்களையும், நில ஆக்கிரமிப்புக்களையும் தடுக்கவோ அல்லது அதனைப்பற்றி பேசவோ முடியாதவர்களாகவே
இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் எமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு தொடர்பாக எதிர்த்து குரல் கொடுப்பது மட்டுமன்றி அதற்காக சட்ட நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றோம்.
எங்களால் வீதிகள் போடவோ, பாலங்கள் கட்டவோ, மாடிக்கட்டடங்கள் கட்டவோ முடியாது. ஆனால் எமது தமிழ் மக்கள் 65 வருடமாக இன்னல் பட்டுக்கொண்டிருக்கும் எமது இனத்திற்கான இறுதித்தீர்வு கிடைக்கும் வரை த.தே.கூட்டமைப்பு தனது பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRVLclw6.html#sthash.5KepRc0z.dpuf

Geen opmerkingen:

Een reactie posten