அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார்.
அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்யர் ஒருவரால் முதன்முதலாக டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் குறிப்பிட்ட நேரத்துக்குள் உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten