[ புதன்கிழமை, 23 யூலை 2014, 08:26.21 AM GMT ]
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த அமைப்பின் தலைவர்,
இலங்கை முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் இனிமேல் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் நேரடியான தலையீடுகள் இலங்கையின் பாதுகாப்பு ஸ்தாபனங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதாக அவரது இந்த கருத்து அமைந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சில மாதங்களுக்கு முன்னர் புத்த பகவானை தரக்குறைவாக பேசி சிங்கள, பௌத்த சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து பௌத்த மத தலைவர்களிடம் தவ்ஹித் ஜமாத் அமைப்பு மன்னிப்பு கோர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளை தவ்ஹித் ஜமாத் அமைப்பு முஸ்லிம் தீவிரவாதத்தை நேரடியாக ஆதரிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு என பௌத்த அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எனினும் தாம் எந்த விதமான பயங்கரவாதத்தையும் ஆதரிக்கவில்லை என தெரிவித்து, அந்த அமைப்பு குறித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனிடையே தவ்ஹித் ஜமாத் மிகவும் பயங்கரமான அமைப்பு என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுவதாகவும் அந்த அமைப்பு ஆயுத பயிற்சிகளை பெற்றுள்ளதுடன் , தமிழ்நாட்டுடன் தொடர்புகளை வைத்துள்ளதாகவும் பௌத்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckt0.html
புதிய அரசியல் அமைப்பை தொடங்க போகும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 08:38.02 AM GMT ]
இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் ஜே.வி.பியில் இருந்து விலகியவர்களாவர்.
ஒரு காலத்தில் அரசியலில் முன்னணியில் செயற்பட்டு, வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து கொண்டவர்களும் இந்த புதிய அரசியல் அமைப்பில் இணைய உள்ளதாகவும் தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckt1.html
கொலைக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் தேற்றாத்தீவு தோட்டத்திற்குள் சடலமாக மீட்பு- மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 08:39.58 AM GMT ]
களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, கோவில் வீதியை சேர்ந்த ரத்னம் கிருஸ்ணபிள்ளை (45வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித் தோட்டத்திலேயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் நஞ்சருந்தியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்பாக தனது மாமானார் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட போது அவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசடித்தீவு பாடசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவில் உள்ள பாடசாலையொன்றில் உணவு உட்கொண்ட மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக எட்டு பேர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை பிற்பகல் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஐந்தாம் தர மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடசாலை முடிந்து பெற்றோர் கொண்டுவந்து கொடுத்த உணவினை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதனிடம் கேட்டபோது,
பாடசாலை வேளை முடிந்ததும் பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்றது.
இந்த மாணவர்களுக்கான உணவினை பெற்றோர் கொண்டுவந்து கொடுத்துச் செல்வர். அந்த உணவுகளை மாணவர்கள் தங்களுக்குள் பங்கிட்டு உண்பர்.இதில் நீண்ட தூரங்களில் இருந்தும் மாணவர்கள் வருவதால் பெற்றோர் பாடசாலைக்கே உணவினை கொடுத்துச்செல்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கான உணவினை பெற்றோர் கொண்டுவந்து கொடுத்துச் செல்வர். அந்த உணவுகளை மாணவர்கள் தங்களுக்குள் பங்கிட்டு உண்பர்.இதில் நீண்ட தூரங்களில் இருந்தும் மாணவர்கள் வருவதால் பெற்றோர் பாடசாலைக்கே உணவினை கொடுத்துச்செல்கின்றனர்.
இவ்வாறாக உணவு உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரு பெண்கள் மற்றும் ஆறு ஆண் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்தியர்களுடன் பேசினேன் மாணவர்களுக்கு எதுவித ஆபத்தும் இல்லையென்றும் சாதாரண வாந்தியே ஏற்பட்டதாகவும் அவர்கள் இன்று வீடு செல்லமுடியும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் சுகாதார பிரிவினரின் கவனத்துக்கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckt2.html
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக போராட தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 09:53.06 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தாழ்த்தியும் புறந்தள்ளியும் வருகிறார்.
இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வருவதற்கு முன்னர் அமைச்சர்கள் கூடி இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.
அங்கு கருத்து தெரிவித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அமைச்சர் மைத்திரிபாலவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் வழங்காது போனால், தாம் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் போல் ஆகிவிடுவோம் என கூறியுள்ளார்.
அத்துடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை நடத்தும் கூட்டத்திற்கு எவரும் செல்ல வேண்டாம் எனவும் பிரதியமைச்சர் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டு ஆட்சியில் அடிவாங்கி, சிறைகளில் இருந்து, உயிர்களை தியாகம் செய்து சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை நாம் ஏற்படுத்திய பின்னர், அமெரிக்காவில் இருந்து வந்து இவர்கள் எமக்கு அரசாங்கத்தை நடத்துவது பற்றி பாடம் நடத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckt7.html
Geen opmerkingen:
Een reactie posten