[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 02:49.28 PM GMT ]
இளைஞர் வலுவூட்டல்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும 2010ம் ஆண்டு ஏனையவர்களின் உந்துதலால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா அதில் தோல்வியடைந்தார்.
அவர் இன்று உரசிப்பார்த்து வீசப்பட்ட லொத்தர் டிக்கெட்டை போன்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலிகமுவ பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், சரத் பொன்சேகாவை கொண்டு செய்ய முடியாத ஒன்றையே இன்று சிலர் மாதுளுவாவோ சோபித தேரரை வைத்து செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclrz.html
எல் நீனோவால் இலங்கைக்கு பாதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 02:59.34 PM GMT ]
இலங்கையில் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் மத்திய மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclr0.html
கல்கிஸ்ஸ போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் பணி இடைநிறுத்தம்- சிலாபம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 04:21.54 PM GMT ]
கடமைத் தவறி செயற்பட்டமைக்காக இவ்வாறு பணி இடைநித்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்களை உரிய முறையில் கடமையில் ஈடுபடுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு இடமாற்றம்
சிலாபம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சில உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கடுமையாக தாக்கியமை தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குடிக்கத் தண்ணீர் கேட்ட போது உயர் அதிகாரி சந்தேக நபர் மீது சிறுநீர் கழித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclr1.html
Geen opmerkingen:
Een reactie posten