[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 04:17.32 AM GMT ]
அமைச்சரின் இணைப்புச் செயலாளரான தொன் பீட்டர் நாணக்காரவிற்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள சதொச நிறுவனக் கட்டடத்தின் ஆறாம் மாடியில் காணப்படும் நிதி மற்றும் கணக்காய்பு பிரிவின் கதவினை உடைத்து தீ வைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து இடம்பெற்ற இடத்தில் தொன் நாணயக்காரவின் கைவிரல் அடையாளங்கள் மூன்று இடங்களில் பதிவாகியுள்ளன.
நிறுவனத்திற்கு சொந்தமான பல முக்கியமான ஆவணங்கள் இந்த தீ விபத்தில் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீ விபத்து காரணமாக அமைச்சு பல மில்லியன் நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், இந்த வழக்கு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblv3.html
இலங்கை மீதான ஐநா விசாரணை தேவையற்றது! வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி தெரியாது!- பாலித கோஹன
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 04:39.53 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் விசாரணை என்பது முழுமையாக வேண்டப்படாத ஒன்றாகும். இது மூன்றாம் உலக வறிய நாடு ஒன்று பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காக தண்டிக்கப்படுவதைப் போன்றதாகும் என்று பாலித கோஹன தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ளைக் கொடி விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலித கோஹன,
புலிகள் எவ்வாறு சரணடைய வேண்டும் என்பது குறித்து ஐரோப்பிய இடையீட்டாளர்களுக்கு தான் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாகவும் எனினும் சரணடைதல் குறித்த விவகாரம் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார் என ஏ.எவ். பி. செய்தி சேவை கூறியுள்ளது.
குற்றச்சாட்டுக்களை சுமத்துவது இலகுவானதாகும். ஆனால் அவற்றில் நம்பகத்தன்மை உள்ளதா என்பது வேறு விடயமாகும் என்றும் பாலித கோஹன கூறியுள்ளார்
யுத்தம் முடிந்த போது இலங்கையின் வெளிவிவகார செயலாளராக கடமையாற்றிய பாலித கோஹன தற்போது நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக கடமையாற்றுகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblv4.html
Geen opmerkingen:
Een reactie posten