தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 juli 2014

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்!

ஊடக தணிக்கை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 02:47.38 AM GMT ]
இலங்கையில் ஊடக கட்டுப்பாடு நீக்கப்பட்டால் மாத்திரமே நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும் என்று சி.பி.ஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மையில் இனக்கலவரம் ஏற்பட்டது. இதன்போது பல்வேறு சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகின.
எனினும் இலங்கை அரசாங்கம் செய்திகள் வெளியாவதை தடுப்பதில் ஈடுபட்டிருந்தது.
இதன்காரணமாக பல்வேறு உண்மை தகவல்கள் தடுக்கப்பட்டதுடன் இனங்களுக்கு இடையில் வதந்திகளும் பரப்பப்பட்டன.
இந்தநிலையில் உண்மை தகவல்கள் மக்களை சென்றடைவதற்கு ஊடக கட்டுப்பாட்டை தவிர்ப்பது அவசியமாகும் என்று சிபிஜே குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக இறுதிப்போரின் போது ஊடகத்தணிக்கை இருந்ததன் காரணமாகவே இரண்டு தரப்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டன.
ஊடகங்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டிருக்குமானால் இந்த மீறல்கள் இடம்பெற்றிருக்காது. எனவே ஊடகக்கட்டுப்பாடு மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
கட்டுப்பாட்டை தவிர்ப்பதன் மூலமே அதனை மேற்கொள்ளலாம் என்று ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblvy.html

ஊவா முதலமைச்சருக்கும் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் பகிரங்க மேடையொன்றில் வாக்குவாதம்
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 04:05.59 AM GMT ]
ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவிற்கும், வனவள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிற்கும் இடையில் பகிரங்க மேடையொன்றில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
பிரதேசமொன்றில் கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பில் இந்த வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அமைச்சர் என்ற ரீதியிலும், தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியிலும் தமது கருத்துக்களையும் மதிக்க வேண்டியது அவசியமானது என விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
உங்களுக்குத் தெரியாமல் பிரதேசத்தில் கட்டடம் கட்டப்பட்டிருக்காது. இவ்வாறான பிரச்சினைகளின் போது இதனை விடவும் உணர்வு பூர்வமாக கவனம் செலுத்த வேண்டும்.
மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் இவ்வாறான விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென விஜயமுனி சொய்சா, பகிரங்க மேடையில் முதலமைச்சர் அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
அந்தப் பகுதியில் கட்டடத்தை நான் அமைக்கவில்லை. அதனை நகர அபிவிருத்தி அதிகாரசபையே அமைத்துள்ளது என முதலமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாரையும் கோபப்படுத்தவோ கோபித்துக் கொள்ளவோ விரும்பும் நபரல்ல நான்.
ஏதேனும் பிரச்சினைகள் நடந்திருந்தால் அதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLblv2.html

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2014, 03:44.36 AM GMT ]
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கச் செயலாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் மாணவத் தலைவர்கள் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
மாணவர் அமைப்பு தலைவர்களை இலக்கு வைத்து மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyH

Geen opmerkingen:

Een reactie posten