தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினால் தெரிவுக்குழு அமர்வு பாதிக்காது!- அரசாங்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வெளியே வீசப்பட்ட சம்பவம்: பொலிஸ் விசாரணை
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 03:11.08 AM GMT ]
யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவிலிருந்து பெறுமதியான உபகரணங்கள் யாவும் வெளியே தூக்கி வீசி எறியப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பழைய சத்திர சிகிச்சை பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் உபகரணங்களும் மற்றும் மருந்துகள் யாவும் அதிகாலையில் வைத்தியசாலைக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகாதார அமைச்சிற்கு மேற்கொண்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து  சுகாதார அமைச்சினர் பொலிஸாருக்கு குறித்த சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று வைத்தியசாலையின் குறித்த பிரிவில் கடமையாற்றிய அனைவரது வாக்கு மூலங்களும் தற்போது பொலிஸாரால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினால் தெரிவுக்குழு அமர்வு பாதிக்காது!- அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 03:13.27 AM GMT ]
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஜுலை 09ம் திகதி கூடுவது உறுதியென குழுத் தலைவரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சர்வதேசமும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்துவதில் சிறிதும் சளைக்காது எனவும் அவர் கூறினார்.
தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றப் போவதில்லையென அறிவித்திருககிறது. அதுவொரு புதிய விடயமல்ல. எவர் வந்தாலும் வராவிட்டாலும் திட்டமிட்டபடி தெரிவுக்குழு கூடுமெனவும் அவர் தெரிவித்தார்.
 எதிர்ககட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாதவிடத்தும் கூட எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதில் ஆளும் கட்சி சார்பில் 19 பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். இவற்றை தவிர எதிர்க்கட்சிகள் சார்பில் 12 உறுப்பினர்களை நியமிக்குமாறு தெரிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
இதற்கு மேலதிகமாக எம்மால் எதனையும் செய்ய இயலாது.
தமிழ்க் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை திணிக்கிறது
தெரிவுக்குழுவினை எதிர்க்கட்சிகள் பகிஷ்கரித்தாலும், பேரவையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எம்மிடம் இருக்கும் 19 உறுப்பினர்களும் போதுமானவர்களாவர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை பகிஷ்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஒருதலைப்பட்சமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்காது பகிஷ்கரிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten