[ திங்கட்கிழமை, 15 யூலை 2013, 10:17.07 PM GMT ]
தேசிய புறோட் லண்ட நீர் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். இன்று சர்வதேச நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு பாரிய அளவில் முதலீடுகள் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் “நோ பயர் ஸோன்“ என்ற இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஆவணப்படத்தின் இயக்குனரான கெலம் மக்ரே இலங்கைக்கு வருவதில் தடை விதிக்கப்பட மாட்டாது என ஊடக அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாடுகளுக்கு அமைய, தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை மேற்கொள்ளவும் தற்போது நடவடிக்கைகள் துரிதப்படுத்தியுள்ளன.
வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் சிலர், இங்கு மின்சார கட்டணங்கள் அதிக அளவில் அறவிடப்படுவதாக தெரிவித்து வருகின்றனர் என கூறிய அமைச்சர் இது போன்ற புதிய மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கட்டணத்தை மட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
கெலம் மக்ரே, பிரான்சிஸ் ஹரிசன் போன்றோர் இலங்கை வர அனுமதிக்கப்படுவர்! அரசே இறுதியாக தீர்மானிக்கும்!
[ திங்கட்கிழமை, 15 யூலை 2013, 11:52.48 PM GMT ]
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்குச் செய்தி சேகரிப்பதற்காக இங்கு வரக்கூடிய சர்வதேச ஊடகவியலாளர் எவரையும் உள்ளே அனுமதிப்பது தொடர்பில் அரசே இறுதியாகத் தீர்மானிக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சனல் - 04 ஊடகவியலாளர் கெலம் மக்ரே, பிபிசி ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் போன்றோர் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படுவார்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உரிய நியதிகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விண்ணப்பிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கமே இறுதித் தீர்மானம் எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கெலம் மக்ரேவிற்கு இலங்கைக்கு செல்ல வீசா வழங்கக் கூடாது என இலங்கையின் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten