தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் முயற்சியையும் மேம்படுத்த ஆயத்தமாக உள்ளோம்: டக்ளஸ்சும், கருணாவும்

லண்டனில் விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் அமைச்சர் கெஹலியவின் மகனே!- ஸ்ரீலங்கா கிரிக்கெட்
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 02:24.51 PM GMT ]
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சைபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார.
இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இந்த அசம்பாவிதத்தையடுத்து பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் ரமித் ரம்புக்வெல மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும் தவறுதலாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
முன்னர் வந்த செய்தி
மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் முயற்சியையும் மேம்படுத்த ஆயத்தமாக உள்ளோம்: டக்ளஸ்சும், கருணாவும்
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 01:03.03 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் முயற்சியையும் மேம்படுத்த எனது அமைச்சினால் தேவையான உதவிகளை வழங்க ஆயத்தமாக உள்ளோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற தாழங்குடா பனங்கைப்பனி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வு பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுமதி சீவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
எனது அமைச்சினால் நாடு முழுவதற்கும் கடமையாற்ற வேண்டியுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் கொள்கையே எனது கொள்கையாகும் அந்த வகையில் நான் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன்.
பனை வளத்தை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் அதற்காக எனது அமைச்சினால் உதவிகளை வழங்கி வருகின்றோம் என்றார்.
இதன் போது மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பனி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்த 195 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி பனை அபிவிருத்தி சபையின் திட்ட முகாமையாளர் எம்.பி.லோகநாதன், அமைச்சின் தேசிய இணைப்பாளரும் முன்னாள் பாhளுமன்ற உறுப்பினருமான செல்வி கே.தங்கேஸ்வரி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் உட்பட அமைச்சின் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பனி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்தவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பனம் பொருள் உற்பத்திப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.

Geen opmerkingen:

Een reactie posten