தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

யாழ்ப்பாண பெண்ணை கலியாணம் கட்டினால் நல்லது: நமாலுக்கு விஜயகலா MP மந்திரம் போட்டார் !

விஜயகலாவுக்கு தேவையில்லாத வேலை !


யாழ்ப்பாணத்து தமிழ்ப் பெண் ஒருவரை நாமல் ராஜபக்ஷவுக்கு கட்டிவைத்து, விஜயகலா மகேஷ்வரன் எம்.பி. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகிறாராம். நாடாளுமன்றத்தில் வைத்து இதை அவரே நாமல் ராஜபக்ஷவிடம் கூறியுள்ளார். மேலும் யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நாமல் மீது மிகுந்த பிரியம் கொண்டிருப்பதாகவும், விஜயகலா தெரிவித்துள்ளார். எனவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த யாழ்ப்பாணத்து தமிழ்ப் பெண் ஒருவரை நாமல் மணமுடிப்பது சிறந்த வழியாக இருக்கும் என்பது விஜயகலாவின் கண்டுபிடிப்பு.
அதன் மூலம் இனப்பிரச்சினையும் தீர்ந்து விடும், என்பதுதான் அவரது உச்சபட்ச நகைச்சுவை. அதுமட்டுமல்ல, நாமல் விரும்பினால் திருமணத் தரகர் வேலைக்கும் விஜயகலா எம். பி. ரெடி. அவரே சிறந்த யுவதியொருவரை பார்த்து மணமுடித்தும் வைப்பாராம்..இதுவும் விஜயகலா சொன்னதுதான். எனினும் நாமல் ராஜபக்ஷ இது தொடர்பில் மழுப்பலான பதிலை சொல்லிவிட்டு நழுவிச் சென்றுள்ளார். தனக்கு இப்போதே திருமணம் முடிக்கும் எண்ணம் இல்லை என்று மறுத்துள்ள நாமல், விஜயகலாவை தனது பெற்றோருடன் போய்ப் பேசிப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற விஜயகலா, அந்தப் மக்களின் பிரச்சனைகளை மறந்துவிட்டார்.. அதற்குப் பதிலாக சிங்களவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெண் தேடும் வேலையில் இறங்கியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1347.html

Geen opmerkingen:

Een reactie posten