தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டமை மிகப் பெரிய தவறு: மகிந்தவை சாடும் ஹெல உறுமய!

அரசாங்கத்தை கவிழ்க்க கறுப்பு பணத்தை செலவிடும் மேற்குலகம்- டிலான் பெரேரா
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 12:10.38 PM GMT ]
நாட்டில் நிலையாக இருக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஆட்சியில் இருக்கும் நிலையான அரசாங்கத்தை கவிழ்க்க போதுமான கறுப்பு பணத்தை செலவிட மேற்குலக நாடுகள் தயாராக இருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நபர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் தகவல்கள் மூலம் இது உறுதியாகியுள்ளது.
தமக்கு அடிப்பணிந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க மேற்குலக நாடுகள் எதனையும் செய்ய தயாராக இருக்கின்றன.
நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தியேனும் ஆட்சி அதிகாரத்தை பெற எதிர்க்கட்சி எதனை வேண்டுமானாலும் செய்து வருகிறது.
ஐக்கிய தேசியக்கட்சி கரைந்து போயுள்ளதால், தலைவர்களை வேறு கட்சிகளில் இருந்து பலியாக எடுத்துக்கொள்கின்றனர்.
மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் முடிச்சுகளில் சிக்கியுள்ளார் எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew6.html
மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை நோஞ்சானாக மாற்றி விட்டார்: கே.டி.லால்காந்த
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 11:43.42 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இதற்கு முன்னர் பதவிக்கு வந்தவர்கள் நாடாளுமன்றத்தை பலம் குன்ற செய்தனர் ஆனால், மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கந்தலான நோஞ்சானாக மாற்றி விட்டதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று நடைபெற்ற தொழிற்சங்கத்தின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே ஜே.வி.பி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஒன்று மகிந்த ராஜபக்ஷ நடத்த தீர்மானித்துள்ள இந்த தேர்தல் சட்டவிரோதமானது. இரண்டாவது மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க விரும்பவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை எனவும் லால்காந்த கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew5.html
யாழில் விநாயகருக்கு வந்த வினை! ஆலயங்களில் தேங்கிக் கிடக்கும் உணவுகள்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 11:29.46 AM GMT ]
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று பிள்ளையார் ஆலயங்களில் நடைபெறவிருந்த விசேட பூசைகளைக் கைவிடுமாறு  இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ள்ளையார் ஆலயங்களில் இன்று சதுர்த்தி பூசைகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, அங்கு சென்ற இராணுவத்தினர் பூசை வழிபாடுகளை கைவிடுமாறு கூறியுள்ளனர்.
இதனால் பக்தர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக இன்று நடைபெறவிருந்த அன்னதான நிகழ்வுகளை இராணுவத்தினர் தடை செய்ததால் சமைத்த உணவுகள் ஆலயங்களில் தேங்கிக் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி, பளை, கச்சாய் போன்ற இடங்களில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்வாறு இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew4.html
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டமை மிகப் பெரிய தவறு: மகிந்தவை சாடும் ஹெல உறுமய
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 10:26.16 AM GMT ]
இந்திய ஹெரோயின் கடத்தல் வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி உட்பட அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டமையானது இந்திய ஹெரோயின் போதை பொருள் கடத்தல்கார்களுக்கு செய்த உதவியாகும் என அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு செய்ய முடியாதது ஒன்றும் இல்லை என்பது நன்றாக புலனாகியுள்ளது.
மிகப் பெரிய ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மதிப்பிற்குரிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்ட 5 இந்திய மீனவர்கள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த செயலானது மிகவும் பாரதூரமான பிரதிபலனின் ஆரம்பம் என நாம் காண்கின்றோம்.
இந்திய மீனவர்கள் ஊடாக ஹெரோயின் மற்றும் அதி பயங்கர போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தி வரப்படுவது எவருக்கும் ரகசியமான ஒன்றல்ல.
இதன் பின்னணியில் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தற்போது செயலிழந்துள்ள பிரிவினைவாத பயங்கரவாதிகள் இருப்பதுடன் பெரும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவுகளின் கடும் முயற்சிகளினால் கைது செய்யப்படும் போதை பொருள் கடத்தல்கார்களுக்கு நாட்டின் சட்டத்திற்கு அமைய உச்சளவு தண்டனை வழங்கப்படுகிறது.
தண்டனை வழங்கப்படும் போது அவர்கள் எந்த இனம், மதம் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
இவ்வாறான நிலைமையில், இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக மதிப்புக்குரிய நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை இரத்து செய்து குற்றவாளிகளை விடுதலை செய்து அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை பாரதூரமான தவறு.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரங்கள் எப்படியானது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் ஓமல்பே சோபித தேரரின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew2.html

Geen opmerkingen:

Een reactie posten