தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

மஹிந்தவின் வெற்றிக்காக கே.பி நடவடிக்கைகளில் ஜே.வி.பியின் செய்தித்தளம்!

இந்தக் கிராமத்தை கவனிக்க ஆட்கள் இல்லையா?: யாழ். பொம்மைவெளி மக்கள் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 09:30.53 AM GMT ]
யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் தமக்கு நிம்மதியான வாழ்விடத்தை பெற்றுக் கொடுக்ககோரி யாழ்.பொம்மவெளி பகுதியில் மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
இன்றைய தினம் காலை 8 மணியளில் குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஊர் மக்கள் முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனினும் இன்றுவரை எமக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை பெற்றுக் கொடுப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அக்கறையற்றிருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் உணவு சமைக்கவும், படுத்துறங்கவும் முடியாத நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கையில், அதிகாரிகளுக்கு இந்த நிலமையினை தெளிவுபடுத்தியும் இன்றுவரை தம்மை வந்து பார்க்கவோ, அவசர உதவிகளை வழங்கவோ இல்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் மக்கள் யாழ்ப்பாணம் - அராலி வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அங்கே விரைந்துவந்த பொலிஸார் நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் மக்களுடைய போராட்டத்திற்கு தடைவிதிக்கவில்லை. இந்நிலையில் யாழ்.பிரதேச செயலர் மற்றும் துறைசார் அதிகாரிகள் வந்து, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmwy.html
அரசின் அழுக்கை கழுவும் வீரவன்ஸ சல்லி காசுக்கும் மதிப்பற்றவர்: முக்கிய அமைச்சர் சாடல்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 09:40.17 AM GMT ]
அரசாங்கத்தின் அரசியல் அழுக்கை கழுவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, ராஜபக்ஷவினரின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்க அணித்திரண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், சல்லி காசுக்கும் மதிப்பில்லாதவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
வீரவன்ஸ தனக்கு தானே 600 மில்லியன் ரூபா என்று விலையை நிர்ணயம் செய்து கொண்டாலும் அரசாங்கத்தின் அரசியல் அழுக்கை கழுவும் அவருக்கு, மக்கள் மத்தியில் மதிப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் அரசாங்கத்தில் இருந்து வெளியேற போவதாக அந்த முக்கிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தான் உள்ளிட்ட தமது அணியினர் மனசாட்சிக்கு இணங்கி இந்த தீர்மானத்தை எடுத்த போதிலும் ஜனாதிபதியின் மேசையில், இருக்கும் ஊழல், மோசடிகள் அடங்கிய பல கோப்புகளை கொண்டுள்ள வீரவன்ஸ போன்றவர்களுக்கு அரசாங்கத்தின் கழிவறையை கழுவி சுத்தம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmwz.html
மஹிந்தவின் வெற்றிக்காக கே.பி நடவடிக்கைகளில் ஜே.வி.பியின் செய்தித்தளம்!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 09:29.05 AM GMT ]
கே.பி என்ற குமரன் பத்மநாதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பல்வேறு நடவடிக்கைகளில்  ஈடுப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன் முதல் கட்டமாக கே.பியின் ஆலோசனைக்கு அமைய தமிழ் அமைப்பொன்றின் உறுப்பினர் ஒருவர் சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்றுள்ளதாக ஜே.வி.பியின் செய்தித்தளமான லங்காட்ருத் தெரிவித்துள்ளது.
குறித்த தொலைக்காட்சி விவாதம் பற்றிய செய்திகளை அரசாங்கத்தின் தினமின பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவரை நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போவதாக சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்பின் உறுப்பினர் தெரிவித்திருந்த கருத்துக்கு தினமின செய்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv7.html


Geen opmerkingen:

Een reactie posten