தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

வைகோவிற்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை!

மைத்திரி, ரணிலை பிரதமராக நியமிக்க போகிறார் என்று பிரசாரம் செய்ய வேண்டாம்!– புலனாய்வுப் பிரிவு அரசுக்கு அறிவுரை
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 07:37.15 AM GMT ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போகிறார் என்று அரசாங்கம் முன்னெடுத்து வரும் பிரசாரம் அரசாங்கத்திற்கே பாதமாகி இருப்பதால், அதனை நிறுத்த வேண்டும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ரணில் பிரதமராக நியமிக்கப்படுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியமைக்கும் என்ற செய்தியை அந்த கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர் புரிந்து கொண்டுள்ளனர்.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர்கள் கூட மீண்டும் செயற்பட தொடங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய உட்கட்சி பூசல்கள், கட்சியின் தொடர் தோல்விகளால், துவண்டு போயிருந்த அந்த கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள் கூட வாக்களிப்பதை தவிர்க்கும் நிலைமை ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியில் ஏற்பட்டு வரும் இவ்வாறான மாற்றம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொது வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவான பின், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது என கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்ற நபரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் பீரிஸ் கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளை காப்பற்றிக் கொள்ளும் எதிர்பார்ப்பில், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போகிறார் என்ற பிரசாரத்தை அரசங்கம் மேற்கொண்டிருந்தது.
எனினும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பையும் மீறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக குரல் கொடுத்து வருவதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.
இதனால், தனது பிரசாரத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்க தரப்பு முனைப்புகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmv0.html
ஜனாதிபதி தன்னிடம் இருக்கும் அமைச்சர்களின் ஊழல் பற்றிய கோப்புகளை வெளியிட வேண்டும்: ரில்வின் சில்வா
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 07:26.13 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் இருப்பதாக கூறும் அமைச்சர்களின் ஊழல், மோசடிகள் பற்றிய கோப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும் என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளையும் மோசடியாளர்களையும் பாதுகாக்க மக்கள் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதில்லை.
ஜனாதிபதி தனக்கு ஆதரவானவர்களின் ஊழல், மோசடிகளை மூடிமறைத்து கொண்டு, அவருடன் முரண்பட்ட பின் அவற்றை வெளியிடப் போவதாக அச்சுறுத்துவது ஒழுக்க கேடானது மாத்திரமல்ல தவறான முன்னுதாரணமாகும் எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து நபர்களின் கோப்புகளும் ஜனாதிபதியிடம் இருக்கலாம் எனவும் இதன் காரணமாகவே அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறாமல் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் தமது கோப்புகள் இல்லாதவர்கள் அரசாங்கத்தில் இருந்து முதலில் வெளியேறி பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க, ஜனாதிபதி இந்த கோப்பு கதையை வெறுமனே கூறியிருக்கலாம். அல்லது உண்மையாகவும் இருக்கலாம்.
சிலநேரம் அரசாங்கத்தில் உள்ள சகல நபர்களின் கோப்புகளும் அவரிடம் இருக்கலாம். சகல அரச தலைவர்களும் இப்படியான நடவடிக்கையை கையாண்டனர்.
இதனால், கொள்ளை, ஊழல், மோசடிகளில் இருந்து ஒதுங்கியிருப்பது சிறந்தது என சாலிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmvz.html
வைகோவிற்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 07:11.37 AM GMT ]
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தூக்கி எறியப்படுவதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீங்களாக வெளியேறி விடுங்கள்’’ என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmvy.html

Geen opmerkingen:

Een reactie posten