தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

சட்டவிரோத குடியேற்றவாசிகள் பற்றிய கொள்கையில் மாற்றமில்லை: ஆஸி!

முஸ்லிம் காங்கிரஸ் முலாம் பூச வரலாம்!- மொஹிடீன் பாவா எச்சரிக்கை!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 02:02.16 PM GMT ]
பொது வேட்ப்பாளரின் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் தங்களது இரு முகத்தில் ஒரு முகத்தை திருப்புமானால் தங்களது துருப்பிடித்த கட்சிக்கு அது ஒரு முலாம் பூசும் நோக்கமாகவே இருக்கும். இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள்கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியல் கள நிலையை சிறுபான்மை சமூகம் அரசியல் வாதிகளின் போக்கையும் நோக்கையும் நன்றாக உணர்ந்துள்ளது.
இதை தங்களது பலமாக போக்குக் காட்டி மீண்டும் அவர்களது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கமே அன்றி வேறில்லை.
வெளிப்படையாக பொது வேட்ப்பாளருக்கே அதிகப்படியான மக்கள் வாக்கு அளிக்கத் தீர்மானித்துள்ளார்கள்,
நிச்சயம் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் பொது வேட்ப்பாளரின் பக்கம் சாய்வார்கள்.
இதை நாடி பிடித்து அறிந்து உள்ளதால் உங்கள் பலத்தை அவர்கள் பலமாக வருகின்ற புது அரசுக்குக் காட்டி உங்கள் பலத்தை மீண்டும் அடகு வைப்பார்கள் என நான் முன்கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmx7.html
கொழும்பு இரவு விடுதியில் சுவிஸ் பிரஜைகள் மீது தாக்குதல்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 02:13.47 PM GMT ]
கொழும்பு, சினமன் கார்டன் ஹோட்டலில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் வைத்து தாக்கப்பட்டார்கள் என்று கூறப்படும் சுவீஸ் நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்று, மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று பதிவு செய்துள்ளனர்.
சினமன் கார்டன் ஹோட்டலில் உள்ள இரவுவிடுதிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாம் தாக்கப்பட்டதாக, அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டை பதிவு செய்து கொண்ட பொலிஸார், படுகாயமடைந்திருந்த குறித்த ஜோடிகளை களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZloy.html
சட்டவிரோத குடியேற்றவாசிகள் பற்றிய கொள்கையில் மாற்றமில்லை: ஆஸி
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 02:22.32 PM GMT ]
ஆட்கடத்தல் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்ட போவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசனை மேற்கோள்காட்டி இலங்கையில் உள்ள அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் எந்த விதத்திலும் யாரும் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்க முடியாது. அப்படி வரும் எந்த நபராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்.
கைது செய்யப்படும் நபர்கள் பப்புவா நியூகியா அல்லது நாவுரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு எப்போதும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த மாற்றம் ஏற்படாது என ஸ்கொட் மொரிசன் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZloz.html

Geen opmerkingen:

Een reactie posten