தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

குற்றவாளிகளை காட்டிலும் இந்தியாவின் நட்பு பெரியது!- மஹிந்த ராஜபக்ச

மகிந்தவை பற்றி நன்கு புரிந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுகிறேன்: மைத்திரிபால சிறிசேன
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 01:08.54 PM GMT ]
மகிந்த ராஜபக்ஷ போன்றவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நானும் எனது அன்பான மனைவியும் மூன்று பிள்ளைகளும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம்.
நம்மை குறித்து நமது மனசாட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனது பாதுகாப்புக்கான பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கின்றேன் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYexz.html
அனந்தியின் யாழ். அலுவலகம் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில்..
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 02:46.45 PM GMT ]
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் அனந்தி தெரிவிக்கையில்,
சுழிபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக இன்று வழமைக்கு மாறாக இராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும், தனது அலுவலகத்திற்கு முன்புள்ள கடைகளில் இருந்து இராணுவப் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYex0.html
குற்றவாளிகளை காட்டிலும் இந்தியாவின் நட்பு பெரியது!- மஹிந்த ராஜபக்ச
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 03:04.46 PM GMT ]
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுக் கொள்கைக்கு மதிப்பளித்தே மரண தண்டனை பெற்ற ஐந்து இந்திய மீனவர்களையும் விடுவித்ததாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் அவர் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் தெ ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
மோடி, ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையுடன் திறந்த வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்.
இதற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தமது முடிவு அமைந்ததாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் கருத்துப்படி தமிழக மீனவர்கள் அப்பாவிகள் என்ற அடிப்படையிலேயே அவர்களை இந்திய சிறைக்கு மாற்றும் வகையிலான கைதி பரிமாற்றத்தை மேற்கொள்ளாமல் அவர்களை விடுவித்ததாக மஹிந்த கூறியுள்ளார்.
இலங்கையின் நீதித்துறையின் தீர்ப்புக்கு இணங்க குறித்த ஐந்து பேரும் குற்றவாளிகள். எனினும் இதனை விட இந்தியாவுடனான உறவு பெரியது என்பதற்காகவே மீனவர்களை விடுவித்ததாக மஹிந்த குறிப்பிட்;டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் மோடியை காத்மண்டுவில் உள்ள சோலாட்டி ஹோட்டலில் சந்தித்து பேசினார்.
இன்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலங்களாக தொடர்ந்தது.
இதன் போது கடல் எல்லை பாதுகாப்பு, சீன நீர்மூழ்கிக் கப்பலின் கொழும்பு வருகை போன்ற விடயங்களை மஹிந்தவின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக தகவல்க்ள வெளியாகியுள்ளன.
இதேவேளை வை கோபாலசாமி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடியமை குறித்து தெ ஹிந்து மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் ஒரு இந்திய தலைவர் என்று சொல்லும் போது நான் எதனை சொல்வது? என்று மஹிந்த திருப்பிக் கேட்டுள்ளார்.
இதற்கிடையில் மோடியும், மஹிந்தவும் இன்று காலை சார்க் ஆரம்ப வைபவ உரையின் போது தமக்கிடையிலான கருத்துக்களை வெளியிட்டனர்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்கிறார். அவருக்கு வாழ்த்துக் கூறுவதாக மோடி குறிப்பிட்டார்.
இதேவேளை தாம் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானால் மோடியை இலங்கைக்கு அழைக்கப் போவதாக மஹிந்த தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYex1.html

Geen opmerkingen:

Een reactie posten