தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

பிரபல பாடசாலையில் கற்கும் 16 வயது மாணவன் வாள் கொண்டு வந்து சண்டை !

ஆனந்தி சசிதரன் குறித்து வட மாகாண ஆளுனர் சந்திரசிறி விசாரணை ஆரம்பித்துள்ளாராம் !


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தொடர்பில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவை என ஆனந்தி கோரியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற போது ஆனந்தி சசிதரன் வட மாகாண சபையின் அனுமதியை பெற்றுக்கொண்டாரா என சந்திரசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாகாணசபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் ஆளுனர் இந்த விளக்கத்தை கோரியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித பதில்களையும் இதுவரையில் அளிக்கவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1348.html

திருப்பி அனுப்பப்பட்ட 40 எயிட்ஸ் நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள் ?


எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று (31) நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போதே ஹரிஸன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனையடுத்து, ஹரிஸனின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, ‘எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 772பேர் மட்டுமே இலங்கையில் உள்ளனர்’ என்று கூறினார்.
உலகின் 33 நாடுகள், இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆயினும், இலங்கையில் இவ்வகை நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். இலங்கையில், 196 நோயாளர்கள் கடந்த வருடம் இனங்காணப்பட்டனர். இந்த வருடம் ஒக்டோபர் வரையில் 169 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நோயை சுகப்படுத்த முடியாது. எனினும், எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு கூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படுவதாக திஸாநாயக்க கூறினார். பிரதி அமைச்சரின் விவரத்தை மறுத்த ஹரிஸன், எச்.ஐ.வி தொற்றுள்ள 40பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறினார்.
‘அவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். இப்போது, இலங்கையில் இந்தியா, பங்களாதேஷ் பிரஜைகள் வேலை செய்கின்றனர். அரசாங்கத்தால் தொற்றுள்ளவர்களை இனங்காண இரத்த பரிசோதனை செய்ய முடியுமா?’ என அவர் வினவினார். சம்மதமில்லாமல் இந்த மருத்துவ சோதனையை சகலர் மீதும் மேற்கொள்வதில் சட்ட பிரச்சினை உள்ளதென பிரதி அமைச்சர் கூறினார்.
http://www.athirvu.com/newsdetail/1349.html

பிரபல பாடசாலையில் கற்கும் 16 வயது மாணவன் வாள் கொண்டு வந்து சண்டை !


யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து அங்கு வந்து பொலிசார், மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யார் என்பது பற்றியும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தான், என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினார்கள் என்பது பற்றியும் பொலிசார் துருவி துருவி ஆராய்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் வினோதம் என்னவென்றால் வெட்டு வாங்கிய ரவுடிகள் இதுவரை எந்த முறைப்பாட்டையும் செய்யவும் இல்லை வைத்தியசாலை எதற்கும் செல்லவும் இல்லையென்பது தான்.
இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை, ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
http://www.athirvu.com/newsdetail/1350.html

Geen opmerkingen:

Een reactie posten