[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 12:48.11 PM GMT ]
வவுனியா – மன்னார் பிரதான வீதியின் காமினி மகா வித்தியாலத்திற்கு அருகிலும் வவுனியா- யாழ்ப்பாணம் பிரதான வீதியின் தாண்டிக்குளம் பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் வாகன போக்குவரத்திற்கும் பெரும் தடையேற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYew7.html
பொங்கல் பானையை கிணற்றில் போட்டு புலனாய்வுத்துறையினர் அட்டகாசம்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 01:05.21 PM GMT ]
திருகோணமலை, மூதூர் முன்னம்போடிவெட்டை கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் நேர்த்திக் கடன் பூசைக்காக வைக்கப்பட்ட பொங்கல் பானையை புலனாய்வுத்துறையினர் கிணற்றுக்குள் போட்டு அட்டகாசம் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த விநாயகர் ஆலயத்தில் இந்துக்களின் வழமையான பூசை நாளான நேற்றைய தினம் நேர்த்திக்கடன் பூசைக்காக வந்தவர்கள் மோதகப் பூசையுடன் பொங்கல் பானை வைத்து பொங்கியுள்ளனர்.
இதன்போது, ஆலயத்திற்குள் நுழைந்த இலங்கை புலனாய்வுத் துறையினர் பிள்ளையாருக்காக பொங்கி வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையை கிணற்றுக்குள் போட்டுவிட்டு ஆலயத்தில் நடைபெறும் பூசையையும் நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
குறித்த பூசை மாவீரர் தினத்திற்காக நடைபெறுவதாகக் கூறியே புலனாய்வு துறையினர் பொங்கல் பானையை கிணற்றுக்குள் போட்டு அட்டகாசம் செய்ததாகவும் குறித்த இடத்தில் நின்ற அந்த பகுதியைச் சேர்ந்த இராணுவத்தினர் பொங்கல் பானையை கிணற்றுக்குள் போடவேண்டாம் எனத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும் அதனையும் மீறி புலனாய்வு அதிகாரிகள் பொங்கல் பானையை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பூசைகளை நடத்தவிடாது தடுத்துள்ளனர்.
அதன்பின்னர் பூசை செய்ய வந்த மக்கள் அழுது புலம்பிவிட்டு ஆலயத்தில் விட்டு வெளியேறியதாக மக்கள் தன்னிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYexy.html
Geen opmerkingen:
Een reactie posten