தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத தமிழர் வாக்குகள் கிடைக்கும்!- சுப்ரமணிய சுவாமி!

உயர்நீதிமன்ற சட்டவிளக்கத்தில் சட்டமொழிக்கு பதிலாக அரசியல் மொழி: சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:09.39 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாம் முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதியடிப்படையில் தடையில்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டவிளக்கத்தில் சட்டமொழிக்கு பதிலாக அரசியல்மொழி எழுதப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகளின் கூட்டு என்பன இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
இந்த சட்டவிளக்கம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டபோதும் அதனை நாடாளுமன்றம் பகிரங்கப்படுத்தவில்லை. எனினும் ஐக்கிய தேசியக்கட்சி அதனை சூசகமாக பெற்று நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியது.
இதனையடுத்தே இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களும் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இதன்அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தையும் நீதித்துறையையும் பணயம் வைத்துள்ளதாக குறித்த சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதேவேளை சட்டத்தரணியான சந்திரபால குமாரகே என்பவரின் கருத்துப்படி நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறையை ஒழிக்க 100 நாட்கள் தேவையில்லை.
அரசியல் அமைப்பின் 123ஆவது சரத்தின்படி உயர்நீதிமன்றத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை காட்டுமாறு கட்டளையிட்டு மூன்று நாட்களில் அந்த அதிகாரத்தை அகற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnw3.html


மூன்றாவது தடவையும் தேர்தலில் வெற்றிபெற சார்க் தலைவர்கள் மகிந்தவுக்கு வாழ்த்து
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:08.46 AM GMT ]
சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் மூன்றாவது தடவையாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்க் மாநாட்டுக்கு வருகை தந்த அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே சார்க் அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரைநிகழ்த்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள உள்ளார். அவருக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் போது தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் அமோக வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவீர்கள் என்பது எங்களது மனமார்ந்த நம்பிக்கையும் பிரார்த்தனையாகும் என்றும் தெரிவித்தார்.
பூட்டான் பிரதமர் லைன் சென் செரின் தொபகே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று குறிப்பிட்டார்.
நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போது ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான திருமதி சுஜாதா கொய்ராலாவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ஜனாதிபதியாக உங்களைச் சந்திப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் வெற்றிக்காக பெண்கள் கைகோர்த்துள்ளோம்- அமைச்சர் பவித்ரா
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 02:02.58 AM GMT ]
வரலாற்றில் பெண்களுக்கு அதிக சேவையாற்றிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. பீதியுடன் வாழ்ந்த பெண்களுக்கு அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதியின் வெற்றிக்காக பெண்கள் கைகோர்த்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெண்கள் அமைப்பு உப தலைவியும் அமைச்சருமான பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெண்கள் அமைப்பின் பிரதான தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
பெண்கள் அமைப்பின் தேர்தல் அலுவலகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய அமைப்பாளர் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் திறந்து வைத்து, அலுவலக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் கூறியதாவது,
2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 4 வருடங்களில் யுத்தத்திற்கு முடிவு கட்டினார். இதன் நன்மை பெண்களுக்கே அதிகமாக கிடைத்தது.
யுத்த பீதியுடன் வாழ்ந்த பெண்கள் அமைதியாக வாழும் சூழலை அவரே ஏற்படுத்தினார்.
வீதிகள் யாவும் செப்பனிடப்பட்டதன் மூலம் வீண் விரயமாகும் நேரத்தை சேமிக்க முடிந்துள்ளது. இந்த பயனும் பெண்களுக்கு கிடைத்திருக்கிறது.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் விதவை மனைவிமார், பிள்ளைகள் ஆகியோருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
75 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதோடு, மகாபொல புலமைப் பரிசில் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனை தொலை நோக்கிலும் பெண்களுக்கே முதலிடம் வழங்கப்பட்டது. தாய்க்கு முதலிடம் வழங்கியே மஹிந்த சிந்தனை ஆரம்பமாகிறது.
எனவே, பெண்களின் நலனுக்காக அரும் பாடுபடும் ஜனாதிபதியின் வெற்றிக்கு பெண்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnw1.html


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத தமிழர் வாக்குகள் கிடைக்கும்!- சுப்ரமணிய சுவாமி
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 12:14.11 AM GMT ]
இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரில் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ள இவ்விடயத்துக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தாமும் உதவி புரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள்  5 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாழ்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnwz.html

Geen opmerkingen:

Een reactie posten