தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற பிரதான அரசியல் கட்சிகள் மறுப்பு-பிரபாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பகிரங்க ஏலத்தில் விற்பனை: சிங்கள பத்திரிகை!

பிரபாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பகிரங்க ஏலத்தில் விற்பனை: சிங்கள பத்திரிகை
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:14.41 AM GMT ]
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான 200 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதி, ஆடை உற்பத்தி தொழிற்சாலை, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எதிரில் இருக்கும் நிலப்பரப்பு காணி, ட்ரோலார் மற்றும் படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு அச்சகங்கள் என்பன கண்டறியப்பட்டுள்ளன.
இதனை தவிர கொழும்பில் உள்ள பிரதான வெளிநாட்டு வங்கியில் இருந்த 50 கோடியே 50 லட்சம் ரூபா பணத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கு, உள்நாட்டு வங்கியில் இருந்து மூன்று கோடியே 50 லட்சம் ரூபாவுடனான வங்கி கணக்கு என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த பணம் திறைசேரிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw4.html
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற பிரதான அரசியல் கட்சிகள் மறுப்பு
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:27.46 AM GMT ]
வடக்கில் நிலை கொண்டுள்ள 15 ஆயிரம் படையினரை முற்றாக விலகிக்கொள்ள பிரதான அரசியல் கட்சியும் இணங்காத காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கில் இருந்து முற்றாக இராணுவம் விலகிக்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் கூட்டமைப்பின் கோரிக்கையை பிரதான அரசியல் கட்சிகள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw5.html

Geen opmerkingen:

Een reactie posten