தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் மீண்டும் தமிழீழம் பிறக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பௌத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன்இ இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நன்றியுடனும்இ பெருமையுடனும் நினைவுகூரும் தினம் இன்று.
இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி தடை செய்திருக்கிறார்கள். தமிழினத்தின் பாரம்பரியமிக்க வீரம் புறக்கணிக்கப்படுமானால், அது பிற நாடுகளால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். தொலைநோக்கு பார்வையின்றி ஈழத்துக்கு இந்தியா செய்த துரோகம்இ தனக்கே அது தேடிக்கொண்ட விரோதமாகிவிட்டது.
ஈழத் தமிழினத்துக்கு செய்த அந்த துரோகத்தை நீக்காமல், அந்த விரோதத்தை நீக்கிட முடியாது. தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் மீண்டும் தமிழீழம் பிறக்கும். தமிழீழ விடுதலைக்கு விதையாய் விழுந்த மாவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten