தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம்: வைகோ வலியுறுத்தல்

ஊவா மாகாணசபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை கோழைத்தனமான செயலாகும்!- ஹரின்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:36.30 PM GMT ]
ஊவா மாகாணசபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை ஓர் கோழைத்தனமான செயலாகும் என மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடுமையான குளிர் காரணமாக சபை அமர்வுகளை ஒத்தி வைப்பதாக முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இவ்வாறு அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஹரீன் பெர்னாண்டோ எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மெதுவாக எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்ற அச்சமே மாகாணசபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கான காரணமாகும்.
எனது தாயாருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையினால் கடந்த 27ம் திகதி நான் சபையின் அமர்வுகளுக்கு செல்லவில்லை.
அந்த நாளில் ஆளும் கட்சியினர் இந்த கோழைத்தனமான முடிவினை எடுத்துள்ளனர்.
அமாவுகளில் பங்கேற்காத நாளில் இவ்வாறு முட்டாள்தனமானதும் கோழைத்தனமானதுமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அமர்வுகளை ஜனவரி மாதம் 15ம் திகதி வரையில் ஒத்தி வைத்தமைக்கான காரணம் எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது.
ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிக்கு செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அடுத்த வாரமளவில் நாம் மாபெரும் புரட்சி ஒன்றை செய்ய உள்ளோம் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊவா மாகாண சபை அமர்வை  தள்ளுபடி செய்தது பயத்தினால் அல்லவெனவும்,  மாகாண சபையின் முதலமைச்சருக்கும் அரசாங்கத்துக்கும் யாப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படியே எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பயத்தின் காரணமாகவா ஊவா மாகாண சபை கூட்டத்தை  குளிர் காலம் என்ற பெயரில் தள்ளிப் போட்டது என அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று வினவிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms7.html
புதுக்குடியிருப்பில் புதைகுழி தோண்டும் பணி 2ம் திகதி
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:54.37 PM GMT ]
பொலிஸ் பரிசோதகர் துரைரட்ணம் ஜெயரட்ணம் அடங்கலான 80 பேர் புலிகளால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி விசாரணை முன்னெடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். 
அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், சட்ட மருத்துவ நிறுவனம், இலங்கை நில அளவை திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் பங்களிப்புடன் இது தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மூலம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் புலிகளினால் சட்டவிரோதமாக சிறைக்கூடமொன்று நடத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம், இராணுவ கப்டன் லக்கி அடங்கலாக 80 தமிழ் இளைஞர்கள் புலிகள் இயக்கத்தினால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீதவான் விசாரணையின் பின் கொலைகள் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பிரதேசத்தில் எதிர்வரும் 2ம் திகதி அகழ்வுகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmty.html
மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி பிரச்சாரம்!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 12:03.22 AM GMT ]
மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி பிரச்சாரப் பணிகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத ஜனாதிபதி தேர்தலுக்கு இடமளிக்க மாட்டோம் என்ற தொனிப் பொருளில் முன்னதாக பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பில் அண்மையில் ஜே.வி.பி மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வாதிகார வெறியை தோற்கடிப்போம்ää ஜனநாயகத்திற்காக அணி திரள்வோம் போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நாடு முழுவதிலும் ஒட்டப்பட உள்ளன.
எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
எனினும், ஜே.வி.பி மேடையில் இருந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmtz.html
ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம்: வைகோ வலியுறுத்தல்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 12:27.51 AM GMT ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கீழ் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பினாங்கு மாநாட்டின் பிரகடன விளக்க பொதுக்கூட்டம் தியாகராய நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ பேசியது:
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச மீண்டும் வெற்றி பெறுவதற்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியுள்ளார். இதன் மூலம் பிரதமர் பதவியை மோடி களங்கப்படுத்தியுள்ளார். இதுவரை, எந்த நாட்டு அதிபர் தேர்தலிலும் யாரையும் வெற்றிபெற இந்தியா சார்பில் வாழ்த்தியது இல்லை.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம் என்று அறிவித்தார். அந்த வழியை நரேந்திரமோடி கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பாக உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பிரகடனங்களைப் பினாங்கு மாநாட்டில் நிறைவேற்றினோம்.
இந்த தீர்மானங்களை சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டுகள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலை நீடித்தால் தமிழகம் தனித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmt0.html

Geen opmerkingen:

Een reactie posten