தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

லண்டனில் அதிரடி: இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய குழு பரிந்துரை !

கழுத்தை இறுக்க ஆரம்பித்துள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள்: ஐ.நாவிடம் கோரியது என்ன ?

[ Nov 28, 2014 02:56:12 PM | வாசித்தோர் : 7690 ]
இலங்கையில் இயங்கிவந்த பல சர்வதேச தொண்டு நிறுவனங்களை, கோட்டபாய வெளியேற்றி இருந்தார். புலிகளுக்கு அவர்கள் உதவினார்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தகவலைகளை திரட்டினார்கள் என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே இந்த தொண்டு நிறுவனங்களை இலங்கையில் இருந்து வெளியேற்றினார்கள். தற்போது இந்த தொண்டு நிறுவனங்கள் பல இணைந்து ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஐ.நா மிகவும் உண்ணிப்பாக கவனிக்கவேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனூடாக கள்ள வோட்டுகள் விழுவதையும், தில்லுமுல்லுகள் நடப்பதையும் தவிர்கமுடியும் அல்லவா.
இதனை தான் இந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஐ.நாவிடம் கோரியுள்ளார்கள். தமது நிறுவனங்களை இலங்கையில் இருந்து வெளியேற்றியதற்கு தகுந்த பதிலடி கொடுக்க இதுதான் நல்ல தருணம் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன ? ஒட்டுமொத்தத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று இலங்கையில் ஏற்படவேண்டும் என்று, மேற்குலக நாடுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்பது நன்றாகப் புரிகிறது. இதேவேளை இலங்கையில் பலமான எதிரணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. தமிழர்கள் வோட்டுகள் யாருக்கு கிடைக்கிறதோ அவரே அடுத்த ஜனாதிபதியாகும் நிலை கூட உருவாகியுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1534.html


லண்டனில் அதிரடி: இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு பிரித்தானிய குழு பரிந்துரை !

[ Nov 28, 2014 03:43:43 PM | வாசித்தோர் : 6390 ]
இலங்கை அரசாங்கம் ஐ.நா விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்றின் வெளிவிவகார குழு யோசனை முன்வைத்துள்ளது.
இலங்கை குறித்த ஐ.நா வின் சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகி விட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் அதற்கு பல முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்த முயல்வதுடன், ஐ.நா விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் மறுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய பாராளுமன்றின் வெளிவிவகார குழு, இலங்கையை வழிக்குக் கொண்டுவர இலங்கை மீது பொருளாதார தடைகள் விதிப்பது உட்பட சகல சாத்தியப்பாடுகளையும் பரிசீலிக்கவேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தாலோ, ஐ.நாவுடன் ஒத்துழைக்கும் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறினாலோ இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நீக்குவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா ஆராயவேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்றின் வெளிவிவகார குழு பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணைக்கு இலங்கையை ஒத்துழைப்பு வழங்கச்செய்வதற்காக இந்தியாவின் புதிய அரசாங்கத்துடனும் பிரித்தானிய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்றும் வெளிவிவகார குழு ஆலோசணைத் தெரிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் நேற்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் வெளிவிவகாரக் குழு சமர்ப்பித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்தினால் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான குழு நியமிக்கப்படுகின்றது. இதில் பிரித்தானியாவின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு முன்வைக்கும் யோசனைகள் ஒட்டுமொத்த பிரித்தானிய பாராளுமன்றத்தையும் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது.
http://www.athirvu.com/newsdetail/1536.html



Geen opmerkingen:

Een reactie posten