[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 08:48.10 AM GMT ]
அன்றைய தினம் பொலனறுவை கல் விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தூய்மையான தலைமைத்துவம் காருண்யமான ஆட்சி என்ற தலைப்பில் அவரது பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிரணி அரசியல் கட்சிகள், சமய அமைப்புகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர் இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே தேர்தல் பிரசார நடவடிக்கை அலுவலகம் ஒன்றை மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் திறந்து வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYewy.html
கருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்து விட்ட கடிதம்: வைகோ கிளப்பும் பரபரப்பான இரகசிய தகவல்!!
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 09:21.34 AM GMT ] [ விகடன் ]
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ,
1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து, தமிழர் தேசிய திருவிழாவாக ம.தி.மு.க. கொண்டாடுகிறது.
கோவில் முன்பு பொங்கல் வைத்து கொடுப்பதையோ, பட்டாசு வெடிப்பதையோ யாரும் தடுக்க முடியாது. போஸ்டரை கிழிப்பது, கைது செய்வது போன்றவை பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதாகவே நான் பார்க்கிறேன்.
பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடியதற்காக, புதுக்கோட்டை அகதி முகாமில் தடியடி பிரயோகம் நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்கள் விடுதலை தாகம் அண்ணாவால் உருவாக்கப்பட்டது. தி.மு.க.வில் நாங்கள் 30 ஆண்டுகள் பாடுபட்டோம். விடுதலை புலிகளை காரணம் காட்டிதான் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். அதனால்தான் ம.தி.மு.க. தோன்றியது.
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய நேரம், பிரபாகரனை சந்திக்க நான் கள்ளத்தோணியில் சென்றேன். ஆனால் நீண்ட நாள் அங்கிருக்க முடியவில்லை. என்னை திரும்பிச் செல்ல தலைவர் வலியுறுத்தினார். நான் மறுத்த போதும் கண்டிப்பாக போக வேண்டும் என்றார்.
என்னோடு 8 தளபதிகள் உட்பட 57 பேரை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார். அப்போது எல்லோரும் குப்பி அணிந்திருந்தார்கள். எனக்கும் ஒரு குப்பி கொடுங்கள் என்றேன். அதற்கு அவசியமிருக்காது என தலைவர் சொன்னார். 'இல்லை எனக்கும் தர வேண்டும். நான் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தி விடும்' என்றேன்.
சண்டை போட்டு கேட்ட பின்னர், அவர் கழுத்தில் இருந்த இரு குப்பியில் இருந்து ஒரு குப்பியை எடுத்து என் கழுத்தில் மாட்டி விட்டார். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார். 'அன்பின் அண்ணா அவர்களுக்கு...!' என தொடங்கி இரு பக்க கடிதத்தை கலைஞருக்கு எழுதி கொடுத்தார்.
அந்த கடிதத்தை பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை. இலங்கையில் 1999ம் ஆண்டில் மிகப்பெரிய யுத்தம் நடந்தது. அப்போது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க மறுத்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். எவ்வளவு பணம் கொடுக்கிறேன் என்றாலும் ஆயுதத்தை விற்க மாட்டேன் என சொன்னார். அவர் தான் தலைவர்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் நரேந்திர மோடியிடம் வாஜ்பாய் பின்பற்றிய கொள்கையைதான் பின்பற்ற சொல்கிறேன்.
2004ம் ஆண்டில் பிரதமரான மன்மோகன்சிங், சோனியாகாந்தியால் ஆட்டுவிக்கப்பட்டார். இந்தியா உதவவில்லை என்றால் பாகிஸ்தானும், சீனாவும் உதவும். அவர்கள் காலூன்றி விடுவார்கள் என அதிகாரிகள் பிரதமரிடம் சொன்னார்கள். அதை பிரதமரும் ஏற்றார்.
பக்கத்து நாடுகளுடன் உறவை வலுப்படுத்துகிறோம் என தமிழ் தேசத்தில் உள்ளவர்களின் நெஞ்சில் தீயை கொட்டாதீர்கள்.
தமிழின படுகொலை நடத்தி வரும் இலங்கைக்கு உதவக் கூடாது என 17 முறை மன்மோகன்சிங்கிடம் மன்றாடி இருக்கிறேன். ஆனால் பலன் இல்லை. இலங்கையில் யுத்தத்தை நடத்தியதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். யுத்தத்தை நடத்தியதே இந்தியாதான் என ராஜபக்சேவே வெளிப்படையாக அறிவித்தார்.
இப்போது என்ன நடக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து விட்டு, 578 மீனவர்களை கொன்று விட்டு, மீனவர்கள் 5 பேர் விடுவித்து விட்டோம் என நாடகம் ஆடுகிறார்கள். 5 மீனவர்களும் குற்றமற்றவர்கள். அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அப்படி என்றால் அவர்கள் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதற்கு யார் தண்டனை கொடுப்பது?
எல்லாம் முடிந்து விட்டது என கருதவேண்டாம். சுதந்திர தமிழீழம் தான் தீர்வு என முதலில் நாங்கள்தான் சொன்னோம். இப்போது அரசியல் தலைவர்கள் பொது வாக்கெடுப்பு என பேச ஆரம்பித்து விட்டார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. உலகம் இப்போது லேசாக விழித்திருக்கிறது.
சுதந்திர தமிழ் ஈழம்தான் எங்கள் இலக்கு. அது நிச்சயம் அமையும் அதை யாராலும் தடுக்க முடியாது. மீண்டும் ராஜபக்ச அதிபராவதற்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச மீண்டும் அதிபராக மோடி நினைப்பது இன்னும் மிச்சம் மீதியுள்ள தமிழர்களை கொன்று குவிக்கவா எனத் தெரியவில்லை“ என்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, “விடுதலை புலிகள் தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து வாதாடி வருகிறோம். புலிகள் மீதான தடை சட்டரீதியாக செல்லாது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடுவோம். உச்சநீதிமன்றம் வரை போராடுவோம்.
சிங்கள அரசு தமிழின படுகொலை செய்த அரசு என்பதை புரிந்து கொண்டு, அதன் வஞ்சகத்தன்மையை புரிந்து கொண்டு, மார்ச் மாதம் நடக்கும் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையை இந்தியா ஆதரிக்க கூடாது என நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறோம்.
பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது தவறு. கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுத்து அனுமதி கொடுக்க வேண்டும்“ என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYewz.html
Geen opmerkingen:
Een reactie posten