[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:27.22 PM GMT ]
தேவ்சிறி அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நாட்டின் ஜனநாயகம் மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசாமல் அரசியல் நடாத்துவது பாரிய தவறாகும்.
ஜனவரி மாதம் 9ம் திகதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் இல்லாமல் இல்லை.
அதிகாரத்தையும் வரப்பிரசாதங்களையும் எதிர்பார்ப்பவர்களே இவ்வாறு மஹிந்தவின் வெற்றியை விரும்புகின்றனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஏற்படும்.
ஒரே குடும்பத்தினர் ஆட்சியில் நீடிப்பது ஆபத்தாக அமையக் கூடும்.
ஒரே குடும்பத்தினர் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும் என நிர்மால் ரஞ்சித் தேவ்சிறி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms5.html
அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராகும் முஸ்லிம் காங்கிரஸ்! கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம்!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 11:31.58 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள பௌத்த கடும்போக்குடைய அமைப்பான பொதுபல சேனா அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது.
முஸ்லிம்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்குதல்களையும், அழுத்தங்களையும் கொடுத்த பொதுபல சேனா அமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை.
பொதுபல சேனா ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரி வருகின்றனர்.
முஸ்லிம்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த பொதுபல சேனா ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது துரோகச் செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு பலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்றிரவு ரவூப் ஹக்கீமின் வீட்டில் விசேட கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற்றுக்கொண்டால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தையும் அரசாங்கம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸின் ஆதரவு கலைகிறது. கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதிவரை கிழக்கு மாகாணசபையின் 2015 வரவு செலவுத் திட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்போது அந்த வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால், கிழக்கு மாகாணசபையை கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களான அமீர் அலி, ஷில்பி பாரூக் மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கி தனித்து செயற்பட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸ்சுக்கு 7 உறுப்பினர்களும் மூன்று சுயாதீன உறுப்பினர்களும் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 11 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும் உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் 2 போனஸ் உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா முஸ்லி;ம் கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாக இருந்தால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் இணைந்த ஆட்சி ஒன்றுக்கு வழியேற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.
.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms6.html
Geen opmerkingen:
Een reactie posten