தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

இந்தியாவிற்கு எதிராக எதையும் செய்யமாட்டோம்! இலங்கை !

மாணவனை வல்லுறவு, அதிபருக்கு தர்ம அடி!

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்ததும் மாணவனை வீட்டுக்குச் அழைத்துச் செல்லும் அதிபர் தொடர்ச்சியாக வல்லுறவு புரிந்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றுமொரு சிறுவன் மூலம் தகவலை வெளியில் சொல்லியதோடு பின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெற்றோர் நேற்றைய தினம் பாடசாலை முடியும்வரை நடப்பது என்ன என்பதை மறைந்திருந்து அவதானித்துள்ளனர். பாடசாலை முடிந்ததும் அதிபர் மாணவனை வழமைபோல் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதிபரை பின் தொடர்ந்த பெற்றோர் மாணவன் மீது வல்லுறவு இடம்பெறப்போவதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டு வீட்டுக்குள் புகுந்து அதிபரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான அதிபர் ஊவாபரணகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவன் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/88130.html

இந்தியாவிற்கு எதிராக எதையும் செய்யமாட்டோம்! இலங்கை  

இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும், ஈடுபடமாட்டோம் என்று இலங்கை மீண்டும் உறுதியளித்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பிலேயே இலங்கை இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் லோக்சபாவில் நேற்று அறிவித்தார். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செப்டம்பர் 7-13 மற்றும் ஒக்டோபர் 31- நவம்பர் 6 ஆகிய தினங்களில் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமை தொடர்பில் இந்தியா, இலங்கையின் கவனத்துக்கு கொண்டு சென்றது.
இதன்மூலம் இந்தியாவின் அயல்நாட்டில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையை இலங்கையிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்று இலங்கை உறுதியளித்துள்ளதாக சுஸ்மா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியா, தமது பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/88127.html

Geen opmerkingen:

Een reactie posten