தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

கூட்டமைப்பின் நிலைப்பாடு துரிதமாக அறிவிக்கப்படும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

சஷீந்திர ராஜபக்ஷவின் மற்றுமொரு பாதுகாவலர் இன்று உயிரிழந்தார்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 10:46.32 AM GMT ]
ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனம் லொறி ஒன்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்தனர்.
புத்தல– மஹாகொடயாய பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி இந்த விபத்து ஏற்பட்டது.
அப்போது உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனத்தில் இருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZntz.html

நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் சிறந்த விளையாட்டுக்கள் இருக்கின்றது: மங்கள சமரவீர
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 10:58.13 AM GMT ]
நாடாளுமன்றத்தில் மாத்திரமல்ல அதற்கு வெளியிலும் சிறந்த விளையாட்டுக்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர இதனை கூறினார்.
பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் கையெழுத்திடப்படும்.
உடன்படிக்கையில் கையெழுத்திட பொருத்தமான இடம் கிடைக்காது போனால், நடு வீதியில் வைத்து அதில் கையெழுத்திடப்படும்.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிரணியில் இணைய உள்ளவர்கள், எதிரணிக்கு வரும் வரை தமது கிராமங்களில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெறுமனே இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது. எதிரணிக்கு வர போகும் எண்ணிக்கை குறித்து அரசாங்க தரப்பே தகவல் வெளியிட்டது.
அரசாங்கத்தில் இருந்து வெளியே போகும் நபர்கள் பற்றி எண்ணிக்கை பற்றி எந்த விதத்தினாலும் என்னால், உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது எனவும் மங்கள சமரவீர கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnt0.html
கூட்டமைப்பின் நிலைப்பாடு துரிதமாக அறிவிக்கப்படும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 10:39.31 AM GMT ]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி  தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி  தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு துரிதமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகிறது.
போரில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கு தேசிய  பிரச்சினைக்கு தீர்வுகாண்பது, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பல்வேறு அழுத்தங்களை நிறுத்துவது ஆகியன இந்த விடயங்களில் அடங்குகிறது.
இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க போகும் வேட்பாளரை தெரிவு செய்யும் போது இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnty.html

Geen opmerkingen:

Een reactie posten