ஈரோடு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பல்வேறு பிரச்சினைகளுக்காக பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை நடத்தியுள்ளேன். மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும் 1,200 கி.மீ தூரத்துக்கு நடை பயணம் மேற்கொண்டேன். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
நான் ஓட்டுக்காக நடக்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அடுத்த நாள் மே 17-ம் தேதி சென்னையில் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
பிரதமராக மோடி பதவியேற்புக்கு முன்பாக வைகோவுக்கு எம்பி பதவி கிடைக்க போகிறது என அச்சு ஊடகங்களில் எழுதப்பட்டது.
ஆனால் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கைஅதிபர் ராஜபக்சவை அழைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியுடன் 45 நிமிடங்கள் பேசினேன். ஆனால் கல் மனது கரையவில்லை. அவரிடம் மனிதாபிமானம் துளியும் இல்லை.
அதற்கு பிறகு பதவியேற்பு விழா நடந்தபோது ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினேன். அப்போது எங்களை கைது செய்தனர். பதவியேற்பு விழா முடிந்த பிறகு தான் எங்களை விடுவித்தனர்.
பேச்சுரிமைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வாங்கி கொடுத்துள்ளோம். விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசலாம். படத்தையும் வைக்கலாம். விடுதலைப் புலிகள் மீதான தடையை உடைத்து காட்டுவேன்.
நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதை இப்போது கூற முடியாது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதுபற்றி அறிவிப்பேன். அதுவரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.
சுதந்திர தமிழீழம் தான் மதிமுகவின் இலக்கு. தமிழீழ விடுதலை தான் என் வாழ்வின் இலட்சியம். அதை காணாமல் என் உயிர் போகாது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வைகோவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இலங்கை அதிபர் ராஜபக்சவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், வருகிற தேர்தலிலும் நீங்களே ஜெயித்து ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நரேந்திர மோடி வாழ்த்து சொல்லியிருக்கிறார். பதவிப் பிரமாணத்திற்கு அழைத்தபோதே நான் எனது மனதிலே உள்ளதை கொட்டினேன். வாஜ்பாய் அணுகுமுறை ஒன்றுகூட இல்லை. எங்கள் தலையில் கல்லைப்போடுகிறதுபோல் பேசுகிறார். இதையெல்லாம் சகிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நரேந்திர மோடி ஒரு நாட்டின் அதிபர் என்ற முறையிலேயே இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தார். இதில் வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை அரசு விடுவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்காமல், அவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அநாகரிகமாக விமர்சித்து பேசி வருவதாக கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZno6.html
Geen opmerkingen:
Een reactie posten