தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரத்தில்

சிறுபான்மை கட்சிகளை தக்கவைக்கும் முயற்சியில் அரசாங்கம்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:31.37 AM GMT ]
சிறுபான்மை கட்சிகளை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அந்த கட்சிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மை கட்சிகளுக்கு பதவிகளை வழங்குவதற்காக தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சிலர் பதவி விலக நேரிட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
சிறுபான்மை கட்சி ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசாங்கத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக கிழக்கு மாகாணத்தின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகிய அமீர் அலிக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர் இதுவரை அந்த பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட சிறுபான்மை மக்களின் வாக்குகள் எதிரணி வேட்பாளருக்கு கிடைக்கும் என்பதால், அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw6.html

கட்சி தாவவுள்ள உறுப்பினர்களை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடும் பிரதான கட்சிகள்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:51.13 AM GMT ]
கட்சி தாவ தயாராகி வரும் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை கட்சிகளுக்குள் தக்கவைக்க ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
கோடிக்கணக்கான பணத்தை வழங்கும் வாக்குறுதிகளுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களை எதிரணிக்கும் இழுக்கும் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக கோடிக்கணக்கான கறுப்பு பணத்தையும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணத்தையும் குறித்த கட்சிகள் செலவிட தயாராகி வருகின்றன.
எதிர்க்கட்சியின் முக்கியமான உறுப்பினர் ஒருவரை ஆளும் கட்சிக்குள் இழுக்க கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் அந்த திட்டத்தை கைவிடாது ஆளும் கட்சி குறித்த உறுப்பினருடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmxz.html
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட தலைவர் ஐ.தே.கவில் இணைவு
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:58.33 AM GMT ]
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகியவற்றில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக செயற்பட்ட இவர் அண்மைக்காலமாக அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து அவர், இணைந்து கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmx0.html

மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரத்தில்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 11:40.43 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்தில் ஆரம்பமாக உள்ளதாக அவரது தேர்தல் பிரசார நடவடிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின், இந்த பிரசாரக் கூட்டம் சுபதினத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அதன் பின்னர் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளரான அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிராம மட்டத்தில் இருந்து வலுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw7.html

Geen opmerkingen:

Een reactie posten