தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு புதிய அரசாங்கத்திடம் உள்ளது: மனோ கணேசன்

பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட இருவர் கைது - இந்திய மீனவர்கள் கைது
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 05:49.58 AM GMT ]
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பிரதேசத்தல் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு பணத்தை கொள்ளையிட்ட சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடுவலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 17 ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலும் 9 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிசார் கூறினர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 61 ஆயிரத்து 720 ரூபா பணம், தங்கச் சங்கிலி, கெமரா, செல்போன், டிவிடி பிளையர் என்பவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
அத்துருகிரிய பொலசைார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டிணத்தின் நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
தமிழகம் நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த மீனவர்கள் நாகப்பட்டிணம் புஸ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நிர்க்கதியாக இருந்தபோது அவர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள் பின்னர் இலங்கை கடற்படையினரிடம் கையளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmu2.html
மைத்திரியின் சகோதரருக்கு சொந்தமான அரிசி லொறி மீது தாக்குதல்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 06:23.21 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவுக்கு சொந்தமான அரலிய அரிசி நிறுவனத்திற்கு சொந்தமான லொறி மீது ஆளும் கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கம்பஹா மரந்தகஹாமுல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய குழுவொன்று தமது நிறுவனத்தின் லொறி மீது தாக்குதல் நடத்தியதாக மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு சகோதரரான லால் சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் பலமிக்க அமைச்சர் ஒருவர் இந்த தாக்குதலின் பின்னணியில், இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த லொறியின் சாரதி மற்றும் நடத்துனரை அச்சுறுத்திய இனந்தெரியாத நபர்கள், இனிமேல் மரதஹமுல்லவுக்கு அரிசி ஏற்றிக்கொண்டுவரக்கூடாது என்று எச்சரித்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அரலிய ரக சம்பா அரிசி ஆலை உரிமையாளரான டட்லி சிறிசேன  கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னர் வரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தார்.  
இவர் நினைத்த நேரத்தில் இலங்கை முழுவதும் அரிசியின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ராஜபக்ஷவினர் இவருக்கு வழங்கியிருந்தனர்.  
இதன்படி அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 200 கோடி ரூபா கப்பமாக ராஜபக்ஷவினருக்கு வழங்கப்பட்டு வந்தது.  
மைத்திரிபால சிறிசேன கட்சி தாவும் தகவல் கிடைத்தவுடன் அவரது சகோதரர் டட்லி ஊடாகவே அவரைத் தடுத்து நிறுத்தும் பலத்த முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.  
இந்நிலையில் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில். டட்லியின் அரிசிலொறி மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmu4.html
மாணவர் புரட்சிக்கு எஸ்.பி வழிவகுக்கிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 06:25.14 AM GMT ]
இலங்கையில் மற்றும் ஒரு மாணவர் புரட்சிக்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க வழிவகுப்பதை போன்ற தெரிவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
எஸ்.பி திஸாநாயக்க தமது சொல்லாலும் செயல்களாலும் மாணவர் புரட்சி ஒன்றுக்கு வழிவகுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்டர் மூலமாக நேற்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
இதன்போது சம்பிக்கவிடம் கேள்வியை தொடுத்த மாணவர் ஒருவர் ஏன் இவ்வாறான ஒருவருக்கு ஜனாதிபதி உயர்கல்வி அமைச்சை ஒப்படைத்தார் என்று கேட்டமைக்கு சம்பிக்கவிடம் இருந்து பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmu5.html

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு புதிய அரசாங்கத்திடம் உள்ளது: மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 06:02.10 AM GMT ]
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் புதிய அரசாங்கத்திடம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு உள்ளது என பொது எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது எதிர்க்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை இனங்களில் உரிமைகளை பாதுகாக்கும் யோசனை உள்ளடக்கப்படுமா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் சிங்கள பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொது எதிர்க்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பது, 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது, 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் மத, இன, மொழி அடிப்படையின்றிய நீதியான ஆட்சி நிர்வாகம் குறித்த கொள்கையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmu3.html

Geen opmerkingen:

Een reactie posten