தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

ததேகூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியுடன் இணைவு!

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கட்! அமைச்சர் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 07:08.43 AM GMT ]
கொழும்பில் நடைபெறும் ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு 13 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களை அழைக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு வராத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப் பரிசில் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மூன்று மாதத்திற்கான புலமைப் பரிசில் கொடுப்பனவும் ஒரே நேரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசில் இரத்துச் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறும் இந்த நிகழ்வில் வெள்ளை ஆடை அணிந்து கலந்து கொள்ளுமாறும் செல்போன்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், 2 ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கோரி நிர்வாகத்திற்கு சார்பான மாணவர்கள் மூலம் மகஜர் ஒன்றும் கையெழுத்திடப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக,
தமது ஆட்சிக்கு சவால் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மஹாபொல புலமைப் பரிசிலையும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் பணயமாக எடுத்துள்ளது. மஹாபொல புலமைப் பரிசில் வழங்கும் போர்வையில் தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
மக்களுக்குரியவற்றை பணயமாக வைத்து வாக்கு கேட்கும் அளவுக்கு அரசாங்கம் கீழ்த்தரமான நிலைமைக்குள் விழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmoz.html


வெடி மருந்துகளுடன் யாழில் மூவர் கைது!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 07:22.26 AM GMT ]
அதி உயர் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக முச்சக்கர வண்டியில் வைத்து குறித்த வெடி மருந்துகளைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் கச்சேரிக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர்களை, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த வூபர் செட்டிற்குள் இருந்து, 130 கிராம் நிறையுடைய 286 வெடி மருந்து கம்பிகள் மற்றும் 6 செட் வயர்கள், உள்ளிட்ட பல்வேறு வெடி மருந்து வகைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தற்போது, பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo1.html


பிராந்தியத்தின் முக்கியமான ஆயுதம் புலனாய்வுப் பிரிவுகள்: கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 07:33.10 AM GMT ]
பிராந்திய பிரச்சினைகளை தீர்ப்பதில் புலனாய்வு பிரிவுகளின் பணிகள் மிக முக்கியமானவை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் என்பனவே தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளாகும்.
நாம் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பயணத்தை முன்னெடுக்கும் போது இவற்றை அடக்குவது மிக முக்கியமானது.
இதற்காக எம்மிடம் இருக்கும் சிறந்த ஆயுதம் புலனாய்வு பிரிவுகளாகும். புலனாய்வு பிரிவுகள் பெறும் தகவல்களை நாடுகளுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் போதே புலனாய்வு பிரிவுகள் சிறந்த முறையில் செயற்பட முடியும்.
பரிமாறிக்கொள்ளப்படும் இந்த தகவல்கள் இராணுவத்தினருக்கும், சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கும் முக்கியமானவை.
இந்த தகவல்கள் பிராந்தியம் எதிர்நோக்க போகும் அச்சுறுத்தல்கள் தொடர்பில், முன்பாகவே தயாராக அது உதவியாக இருக்கும் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo2.html


ததேகூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியுடன் இணைவு!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 07:53.25 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
வைரமுத்து தியாகராஜா  என்ற பிரதேச சபை உறுப்பனரே இவ்வாறு இணைந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஆலையடிவெம்பு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின் போது விசேட உரையாற்றிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட வடிவேல் துஷ்யந்தன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த பின் கடந்த 2013ம் ஆண்டு அந்த வெற்றிடத்திற்கு தியாகராஜா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmo3.html

Geen opmerkingen:

Een reactie posten