பாலைவனத்தில் கூட உணர்சிபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள்: ஈழத் தமிழர்களின் எழுச்சி !
[ Nov 29, 2014 05:40:20 AM | வாசித்தோர் : 6995 ]
உலகில் உள்ள பல நாடுகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், டோகா கட்டாரிலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. வேலை நிமிர்த்தம் அந்த பாலைவன பூமிக்கு ஈழத் தமிழ் இளைஞர்கள் சென்றாலும், அவர்கள் தமது உணர்வை மட்டும் மறக்கவே இல்லை எனலாம். சுட்டெரிக்கும் வெய்யிலில் கூட மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்ற அமைப்பை செய்து, அவர்கள் அங்கே மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளார்கள். அதிர்வு வாசகர்களுக்காக இதோ பிரத்தியேகமான புகைப்படங்கள்.
ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய பிரதமர் ஈடுபட்டுள்ளார் – லீ ரியன்னன் !
[ Nov 29, 2014 07:34:00 AM | வாசித்தோர் : 3385 ]
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் குற்றச்செயல்கள் தொடர்பில் இறுதியில் உலகம் விழித்துக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்கும் இறுதி நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலிய திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் எனவும், 26 ஆண்டு கால துயரமான யுத்தத்தின் வடுக்களை குறித்த நாளில் தமிழ் மக்கள் நினைவு கூர்வதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக் கொள்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனஅவர் தெரிவித்துள்ளார். அழுத்தங்கள் காரணமாக புகலிடம் கோரும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்காக அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுத்த போதிலும், அவுஸ்திரேலியாவின் பிரதான கட்சிகான லிபரல் மற்றும் தொழில் கட்சிகள் தமிழர் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.மாவீரர் தினத்தில் ரியன்னன் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் இந்த உரையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்
Geen opmerkingen:
Een reactie posten