ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு 41வீதம்! மைத்திரிக்கு 59வீத வாக்குகள்! செய்தி வெளியிட்ட ராவயவுக்கு எதிராக வழக்கு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:40.01 PM GMT ]
பொய்யான தகவல் ஒன்றை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான ராவய செய்தித்தாளில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 59 வீத வாக்குகளை பெறுவார் என்று அரச புலனாய்வு பிரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 41வீத வாக்குகளையே பெறுவார் என்ற தகவலையும் அரச புலனாய்வு பிரிவு மஹிந்தவுக்கு அறிவித்துள்ளதாக ராவய குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தகவலை மஹிந்தவுக்கு தெரிவித்த பின்னர் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சந்திரா வாகிஸ்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ராவய தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கையில் அவ்வாறான ஆய்வு ஒன்றை அரச புலனாய்வுப்பிரிவு மேற்கொள்ளவில்லை என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது சேவைக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராவய செய்தித்தாளுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவி;த்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmr7.html
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டிய தேவை எமக்கில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எண்ணவுமில்லை. அங்குள்ள மக்கள் எமக்கே வாக்களிப்பர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இன்று வெளியான ராவய செய்தித்தாளில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 59 வீத வாக்குகளை பெறுவார் என்று அரச புலனாய்வு பிரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 41வீத வாக்குகளையே பெறுவார் என்ற தகவலையும் அரச புலனாய்வு பிரிவு மஹிந்தவுக்கு அறிவித்துள்ளதாக ராவய குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தகவலை மஹிந்தவுக்கு தெரிவித்த பின்னர் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சந்திரா வாகிஸ்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ராவய தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கையில் அவ்வாறான ஆய்வு ஒன்றை அரச புலனாய்வுப்பிரிவு மேற்கொள்ளவில்லை என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது சேவைக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராவய செய்தித்தாளுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவி;த்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmr7.html
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை!- அமைச்சர் அனுர யாப்பா
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:48.36 PM GMT ]
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அங்குள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர்.
வடக்கில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவு நிச்சயம் எமக்கு கிடைக்கும்.
ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எந்த விமர்சனத்தையும் நாம் முன்வைக்க முடியாது.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
மேலும் எதிரணியினரின் செயற்பாடுகள் மாறுப்பட்டவையாக இருக்கின்றன. உண்மையில் கூற வேண்டுமென்றால் அவர்கள் பகல்கனவு காண்கின்றனர். என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmsy.html

Geen opmerkingen:
Een reactie posten