[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:26.55 AM GMT ]
தாம் இன்னும் கட்சி மாறுவது தொடர்பில் சிந்திக்கவில்லை என்று மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் இன்னும் தாம் தீர்மானிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், எனினும் கட்சியின் தலைமை கட்சியில் இருந்து சிரேஸ்ட உறுப்பினர்களை விலகிச்செல்வதை தடுப்பதற்கான உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கட்சியின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைமை தொடர்பில் பாரிய சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமது தந்தை இறந்த பின்னர் தம்முடன் உடன் இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜித சேனாரத்னவை மறக்க முடியாது என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேல்மாகாண சபையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றால் உதய கம்மன்பில முதலமைச்சராவார் என்று கூறப்படும் செய்திகளுக்கு பதிலளித்துள்ள அவர், முதலமைச்சரானால் பாரிய மாற்றங்கள் எதனையும் செய்துவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp5.html
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மீண்டும் உறுதி: சுஸ்மா
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 02:57.59 AM GMT ]
இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்று இலங்கை மீண்டும் உறுதியளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பிலேயே இலங்கை இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் லோக்சபாவில் நேற்று அறிவித்தார்.
சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செப்டம்பர் 7-13 மற்றும் ஒக்டோபர் 31- நவம்பர் 6 ஆகிய தினங்களில் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமை தொடர்பில் இந்தியா, இலங்கையின் கவனத்துக்கு கொண்டு சென்றது.
இதன்மூலம் இந்தியாவின் அயல்நாட்டில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையை இலங்கையிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை என்று இலங்கை உறுதியளித்துள்ளதாக சுஸ்மா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியா, தமது பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnp6.html
Geen opmerkingen:
Een reactie posten