தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

யாழ். படைத்தளபதி உதய பெரேரா திடீர் இடமாற்றம்!

வடக்கில் பொலிஸாரின் நடமாடும் சேவை அரசியல் நோக்கம் கொண்டதல்ல! யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 03:53.48 PM GMT ]
வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் பொலிஸார் மேற்கொண்டுவரும் நடமாடும் சேவை ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக கொண்டதல்ல என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்துள்ளதுடன், தேர்தலில் யார் வேண்டு மானாலும் வெற்றி பெறலாம் எனவும் கூறியுள்ளார்.
இத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் ஆனால் எத்தகைய அரசியல் நோக்கங்களும் எமக்கு இல்லை. மக்கள் சேவையையே பிரதானப்படுத்தியே நாம் எமது கடமைகளைச் செய்து வருகின்றோம்.
பொலிஸ் நடமாடும் சேவை யாழ் மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதனூடாகவே மக்களுக்கு பல சேவைகளை செய்து கொடுக்க முடியும். இதனை பாரம்பரியம், கல்வி, சுகாதாரம், சிரமதானம் உள்ளிட்ட பல அடிப்படைக குறிப்கோடுளுடனேயே ஆரம்பித்திருக்கின்றோம்.
ஆனால் இதனூடாக நாம் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி நட்புறவை வளர்த்துக் கொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்குவதே எமது நோக்கம். ஆனால் இதனை சிலர் அரசியல் சாயம் பூசுவதற்கு முற்படுகின்றனர்.
அதாவது இந்தச் செயற்பாட்டை நாம் ஆரம்பிக்க தொடங்கிய பின்பு தான் தேர்தல் அறிவிக்கப்பட்டள்ளது.
ஆனால் இதனை நாம் வருடா வருடம் செய்த வருகின்றறோம். இந்நிலையிலையே அரசிற்கு ஆதரவாக பொலிஸார் செயற்படுவதாக தவறான குற்றச்சாட்டக்களை வேண்டுமென்றே சிலர் எம்மீது சுமத்துகின்றனர்.
ஆனால் நாம் அவ்வாறில்லை. இத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யார் வேண்டுமானாலும் வாக்கு கெட்கலாம் தொடர்ந்து யார் வேண்டுமானாலும், வெற்றி பெறலாம். ஆனால் இதனால் எமக்கு ஏதும் ஏற்படப் போவதில்லை. நாம் மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் செய்வோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYex5.html

வெள்ளம் கொண்டுபோகும் நிலையில் நாவற்குழி வீதி
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 04:21.43 PM GMT ]
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு அகற்றல் தொடர்பில் மீண்டும் நல்லூர் பிரதேச சபை சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், 2.5மில்லியன் ரூபா
செலவில் நாவற்குழி பகுதியில் கழிவு அகற்றலுக்காக போடப்பட்ட வீதியும் வெள்ளம் கொண்டுபோகும் நிலையில் காணப்படுகின்றது.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு பொருத்தமான இடம் எதுவும் இல்லை.
இந்நிலையில் கழிவுகளை வகைப்படுத்தி மீள்சுழற்சிக்குட்படுத்தும் திட்டத்தை வடமாகாண சபையினரும், மத்திய அரசாங்கமும் பரிந்துரைத்து வருகின்றன.
இந்நிலையில் ஏ-9 வீதியில் நாவற்குழி யாழ்.வளைவு பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை உரிமையாளரின் அனுமதி பெற்று அங்கே கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அந்த நிலம் நெற்செய்கைக்கு பயன்படுத்தப்படும் நிலம் எனவே அதனை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது என சட்டம் உள்ள நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள கமநலசேவைகள் திணைக்களம் அதற்கு முழுமையான மறுப்பினை தெரிவித்ததுடன்,
கழிவுகள் அங்கே அக ற்றப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியிருக்கின்றனர். இதற்கு முன்ன ர் இந்தப் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்காக 2.5மில்லியன் ரூபா செலவில், பழைய கட்டிட இடிபாடுகளைக் கொண்டு பாதை ஒன்றும் அமைக்கப்பட்டது.
எனினும் அந்தப் பாதை அமைப்பதற்கு அவ்வளவு நிதி தேவையற்றது என விமர்சனங்களும் எழு ந்திருக்கும் நிலையில் குடாநாட்டில் பெய்துவரும் கனமழையினால் அந்த பாதையினை வெள்ளம் அழிக்கும் நிலையும் காணப்படுகின்றது.
நிலை இவ்வாறிருக்க சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட நாவற்குழி அமிர்தா வீதி பகு தியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 22பரப்பு காணியில் கடந்த சில தினங்களா க கழிவுகளை அகற்றியிருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக் கு விடயம்  தெரியவந்ததையடுத்து,
நில உரிமையாளர்கள் பிரதேச சபைக்கு நேரடியாக முறைப்பாடு கொடுத்துள்ளதுடன் தங்கள் அனுமதியில்லாமல் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும் எனவும் கூறியிருக்கின்றனர். மேலும் அவ்வாறு அகற்றப்படாவிட்டால் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறைப்பாடு கொடுப்போம் எனவும் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYex7.html
யாழ். படைத்தளபதி உதய பெரேரா திடீர் இடமாற்றம்
[ புதன்கிழமை, 26 நவம்பர் 2014, 04:17.38 PM GMT ]
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா கொழும்பு இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாளான இன்றைய தினம் அவர் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRaKYex6.html



Geen opmerkingen:

Een reactie posten