தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

மைத்திரியின் சகோதரரை பிடிக்கச் சென்ற சிஐடி வெறும் கையுடன் திரும்பியது !

மகிந்தர் கட்சியை விட்டு மேலும் ஒரு MP எதிரணியில் சென்று சரணடைந்துள்ளார்: மேலும் அதிர்சி !

[ Nov 27, 2014 05:34:43 AM | வாசித்தோர் : 9515 ]
நாளுக்கு நாள் ஆழும் கட்சியில் இருந்து பலர் பிரிந்துசென்று, எதிரணியில் இணைந்து வருகிறார்கள். இவர்களை எவ்வாறு தடுப்பது என்பது தான் பெரும் சவாலாகப் போயுள்ளது. காலையில் கட்டில் விட்டு எழுந்தால் ஒரு நல்ல செய்தி வருவதற்கு பதிலாக அவர் கட்சியை விட்டுப் போனார், இவர் கட்சியை விட்டு தாவினார் என்ற செய்திகளே மகிந்தருக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. இதே வரிசையில் தற்போதும் ஆழும் கட்சியில் உள்ள MP ஒருவர் எதிரணியான மைத்திரி அணுக்குச் சென்றுவிட்டார். அவர் வேறு யாரும் அல்ல, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தான்.
இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இவர் இருந்துள்ளதோடு வன்னி மாவட்ட MP யாகப் போட்டியிட்டு வென்றவரும் ஆவார். மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர். இவ்வாறு பலர் தற்போது மகிந்த கட்சியில் இருந்து தாவ ஆரம்பித்துள்ளார்கள். இது எங்கு போய் நிற்கும் என்று தெரியவில்லை. ஆனால் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்கும் நல்ல செய்திகளாகவே இவை இருக்கிறது.
http://www.athirvu.com/newsdetail/1525.html

மைத்திரியின் சகோதரரை பிடிக்கச் சென்ற சிஐடி வெறும் கையுடன் திரும்பியது !

[ Nov 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11070 ]
பொதுவாக மகிந்த ராஜபக்ஷ தன்னை எதிர்க்கும், நபர்களை கைதுசெய்வது இல்லையென்றால் அவர்களின் உறவினர்களை கைதுசெய்து அச்சுறுத்துவது வழக்கம். அதுபோல கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத்பொன்சேகாவை அவர் கைதுசெய்து சிறையில் அடைத்தார். தற்போது மகிந்தவை விட்டுப் பிரிந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மைத்திரியை மகிந்தரால் கைதுசெய்ய முடியாது. காரணம் என்னவென்றால் அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி ஆவார். அவரை கைதுசெய்தால் அவருக்கு பெரும் அனுதாப அலை எழும். இதனால் மகிந்தர் -கோட்டபாய திட்டப்படி அவரது சகோதரரைக் கைதுசெய்ய திட்டம் போட்டார்கள்.
21ம் திகதி மைத்திரிபாலவின் சகோதரரான வெலி ராஜாவை கைது செய்யச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 25ம் திகதி வெறும் கையுடன் கொழும்பு திரும்பியுள்ளனர் என தற்போது அதிர்வு இணையம் அறிகிறது. பொலிஸ் பரிசோதகர் குணசிங்கவின் தலைமையில் சென்ற குழு பொலன்னறுவை பொலிஸ் அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று தகவல் திரட்டியபோது வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் வெலி ராஜு கைது செய்யப்பட்டு நீதின்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. விசாரணை முறையாக இடம்பெற்று வருவதால் இதில் தலையிடும் வாய்ப்பு சிஐடி பிரிவுக்கு கிடைக்கவில்லை. சென்ற குழு இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளது.
இதனை சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரியவிற்கு அறிவிக்கப்பட்ட போது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி வெலி ராஜுவை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதும் 'சேர்மார் சொல்லும்படி கைது செய்து மனித உரிமை மீறல் வழக்கில் சிக்க முடியாது. அப்படி சிக்கினால் எமது சம்பளத்திற்கே பாதிப்பு வரும். சேர்மார் மேலே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.' நாங்கள் என்ன செய்வது ? என அவர்கள் கையை விரித்துவிட்டனர். அதனால் சிஐடி அதிகாரிகள் கொழும்பு திரும்பிவிட்டனர்.
http://www.athirvu.com/newsdetail/1524.html

Geen opmerkingen:

Een reactie posten