தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

பொதுபல சேனாவின் வழியில் இராவணா பலய

ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:49.27 PM GMT ]
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உறுப்பினரான தியாகராசா கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்றுக்கட்சிக்கு சென்றமையால் எந்தவிதத்திலும் பாதிப்பில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆலையடி வேம்பு பிரதேச சபையில் மாதாந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தியாகராசா சபையில் இருந்து திடீரென எழுந்து, இன்று முதல் இக்கட்சியில் இருந்து விலகி மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக ஆளும் அரசாங்கக்கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு சபையை விட்டு வெளியேறியிருந்தார்.
இவ்வாறு த.தே.கூட்டமைப்பில் இருந்து தங்களது சுகபோக அரசியலுக்காக மாற்றுக் கட்சிக்கு மாறியவர்களின் நிலை தமிழ் மக்கள் மத்தியில் இன்று எவ்வாறு உள்ளது என்பதனை அவர்களே உணர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவரது கட்சி மாறலானது, எந்தவிதத்திலும் எமது கட்சியை பாதிக்காது என்பதுடன் அவரது அரசியல் பயணம் இன்றுடன் முடிவடைந்து விட்டது என்பதனையும் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே எமது கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவிய பியசேனவின் நிலை இன்று மக்கள் மத்தியில் எவ்வாறு இருக்கின்றதென்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அவரது வாழ்வாதாரத்தினை உயர்த்தி தனது குடும்பம் அனைத்து சுகபோகத்தினையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே கட்சி தாவினாரே தவிர தமிழ் மக்களை வாழவைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.
தன்னுடைய நிதி ஒதுக்கீட்டில் பலவேலைத் திட்டங்கள் மக்களுக்காக செய்யப்படுகிகின்றது என்று கூறும் இவர் ஒதுக்கும் 10 இலட்சத்தில் இருந்து அரைவாசி பணத்தினை தான் வீதமாக பெற்றுக் கொண்டே மீதியாக இருக்கும் பணத்திற்கு அந்த வேலைத்திட்டத்தினை செய்வதனையே தனது அரசியல் பயணத்தில் செய்து கொண்டு வருகின்றார்.
இவர்களது இந்த அரசியல் பயணத்தினை மக்கள் என்றைக்குமே ஆதரிக்கமாட்டார்கள். இதற்கு முன்னரும் இவ்வாறானவர்களை மக்கள் ஆதரிக்கவும் இல்லை. மாறாக மக்கள் எமது கட்சியுடன்தான் இருந்து இறுதி வரை உழைப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை.
இன்று அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் தமிழர்களது பூர்வீக பிரதேசங்கள் தொல்பொருள் அகழ்வாராட்சிக்கென்றும், வன பரிபாலன இலாகாவிற்காகவும், இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகவும் நன்கு திட்டமிட்ட முறையில் சூரையாடப்பட்டுக் கொண்டு வருகின்றன.
இதனை இந்த அரசாங்கத்தின் ஏஜென்ட்டுக்களாக இருப்பவர்கள், அதில் உள்ள அரசியல்வாதிகள் யாராவது தட்டிக்கேட்ட வரலாறு இருக்கின்றதா? இல்லை அவர்களும் சேர்ந்துதான் இவ்வாரான வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்.
எமது கட்சி மாத்திரந்தான் இவ்வாறான திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு குரல் கொடுத்து செயற்படுவதுடன் அதனை தடுத்தும் வருகின்றது. இவ்வாறுதான் கண்ணகிபுரம் கிராமத்தில் இலங்கை இராணுவத்தின் அட்டுளியங்கள் பல நடந்தேறி இருந்தன.
அதனை கண்டும் காணாதவர்களாகவே இந்த அராங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் செயற்பட்டார்கள். அதனையும் வெளி உலகத்திற்கு கொண்டுவந்தவர்கள் நாங்கள்தான் இதனையெல்லாம் அறிந்து கொண்ட தியாகராசா ஏன் கட்சிதாவினார் என்பது தற்போது மக்களுக்கு விளங்கும்.
தற்போது அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் உள்ளூர் அரசியல்வாதிகளை பணம் கொடுத்து மாற்றுக்கட்சிக்கு ஆள்ச்சேர்க்கும் பணியில் இராணுவ புலனாய்வாளர்களும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் அரசியல்வாதிகளும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுகின்றார்கள்.
இவ்வாறானவர்களின் செயற்பாடு காரணமாகத்தான் நாவிதன்வெளி பிரதேசத்தில் உப தவிசாளராக இருந்த அமரதாச ஆனந்த என்பவர் எமது கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டதன் நிமிர்த்தம் அவர் கட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டு தற்போது அரசியல் அனாதையாக இருக்கின்றார்.
இதுபோன்றதொரு செயற்பாடுதன் தற்போது கட்சியில் இருந்து விலகியிருக்கும் தியாகராசாவிற்கும் நடக்கும். இதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் எமது கட்சித்தலமை எடுத்திருக்கின்றது.
இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் இவரை கட்சியில் இருந்து விலக்கி அந்த இடத்திற்கு இன்னுமொருவர் நியமிக்கப்படுவார் எனவும் கூறினார்
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt4.html

பொதுபல சேனாவின் வழியில் இராவணா பலய
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:22.34 PM GMT ]
பொதுபல சேனாவை போன்று இராவணா பலய அமைப்பும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க போவதாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க பௌத்த பிக்குகளை அணித்திரட்டப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வரும் பின்னணயில் புலம் பெயர் தமிழர்கள் இருப்பதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராவணா பலய மற்றும் பொதுபல சேனா அமைப்புகள் கடந்த காலம் முழுவதும் சிறுபான்மை இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன் இந்து, இஸ்லாமிய , கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளன.
இந்த அமைப்புகளுக்கு அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மேற்படி அமைப்புக்ள மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் அந்த குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt3.html

Geen opmerkingen:

Een reactie posten