தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

STF அதிகாரி மற்ற STF அதிகாரியை சரமாரியாகச் சுட்டார்: தெனியாய - கொட்டபொல முகாமில் சம்பவம் !

கனடா பாராளுமன்றில் மாவீரர் தின வணக்கம்: அதிர்ந்தது கனடா !

[ Nov 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 14655 ]
கனடாவின் ஒரே ஒரு ஈழத் தமிழ் MP யான ராதிகா சிற்சபேசன் அவர்கள், வரலாறு காணத ஒரு நிகழ்வை நடத்தியுள்ளார். கனேடிய பாராளுமன்றம் கூடியவேளை அவர் ஒரு பிரேரணையை சமர்பித்து தனது உரையை நிகழ்த்தியிருந்தார். சுமார் 1 நிமிடம் நீடித்த இந்த உரையில், மாவீரர்களுக்கு வணக்கத்தைச் சொல்லி, இலங்கையில் நடந்த கொலைகளை எடுத்துரைத்து, இறுதியாக தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என்று பேசி முடித்துள்ளார். முன்னர் எப்பொழுதும் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடைபெற்றது இல்லை. கனடா பாராளுமன்றில் மாவீரகளுக்கு அவர் அஞ்சலி செலுத்தியதும், நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் என்று அவர் பறைசாற்றியதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக உள்ளது. அத்தோடு மாவீரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள அதிகூடிய வீரவணக்கமாகவும் இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1522.html


STF அதிகாரி மற்ற STF அதிகாரியை சரமாரியாகச் சுட்டார்: தெனியாய - கொட்டபொல முகாமில் சம்பவம் !

[ Nov 27, 2014 05:44:15 AM | வாசித்தோர் : 5655 ]
தெனியாய - கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இத்துப்பாக்கிச்சூடு நேற்று முன் தினம் (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு கடமையில் இருந்த மற்றுமொரு கான்ஸ்டபிளே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை நடத்திவருவதாக மேலும் அறியப்படுகிறது. பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சிகளை எடுக்க அங்கே சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1526.html


Geen opmerkingen:

Een reactie posten