தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 november 2014

ஆஸி செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு!

தலவாக்கலை மகா வித்தியாலய மாணவர்களின் புதிய சாதனை!
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:21.43 AM GMT ]
முயற்சி திருவிணையாக்கும் என்பதற்கு தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முன்னுதாரணமாக விளங்குகிறது.
கடந்த வாரம் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான எக்ஸ்பொடிக்ஸ் ரொபோடிக்ஸ் செலேஞ்ச் - 2014 ரொபோட் தடம் பின்பற்றல் போட்டி, காலி றுகுனு பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தால் நடாத்தப்பட்டது.
இதில் 40 பாடசாலைகள் விண்ணப்பித்த போதிலும் 12 பாடசாலைகள் மட்டுமே பங்குபற்றியது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மட்டுமே பங்குபற்றியமை குறிப்பிடதக்கது.
இதே வேளை 12 பாடசாலைகளில் 5 பாடசாலைகள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியது. தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயமும் இறுதி சுற்றுக்கு தெரிவாகியது.
போட்டிகள் கடுமையாக இருந்த போதிலும், இம் மாணவர்கள் முயற்சி கைவிடவில்லை. இதனால் இறுதி சுற்றில் முதலாம் இடத்தை பெற வாய்ப்பு கிட்டியது.
ரோபோவை தயாரிப்பதில், சுகுணேஸ்வரன் ரதர்சன், உதயசூரியன் கிஷாந்தன், ரட்ணராஜ் சஞ்செய், யோகராஜ் விஜித்காந்த், மதலமுத்து வாஸ் டிலான்சன், கனகராஜ் பிரகாஸ் ஆகியோருக்கு சான்றிதழ்களும் 25,000 ரூபாய்க்கான காசோலையும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.
ரோபோவை தயாரிப்பதில் ஆசிரியர்களின் வழிகாட்டல் மிக முக்கியம். அந்த வகையில் ஆசிரியர் திரு. கைலாஸ் நவீன் தான் ,இவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தொடர்ச்சியாக இம் மாணவர்களுக்கு வழங்கினார்.
மாணவர்கள் முயற்சியை கைவிடாமல் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டு கடுமையாக உழைத்தற்கு கிடைத்த வெற்றிதான் இது.
இவ் வெற்றி தொடர்பாக பாடசாலை அதிபர் திரு. ரெங்கன் கிருஸ்ணசாமி தெரிவிக்கையில், மலையகத்தில் மாணவர்கள் மத்தியில் நிறைய ஆற்றல்கள் இருக்கும் போதிலும் அதனை வெளிபடுத்த சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளது.
ஆனால் மாணவர்கள் தங்களுக்குகிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக பயனபடுத்தி தங்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு சபாடசாலை நிர்வாகம் கைக்கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் எங்களுடைய பாடசாலை அதனை வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
இவ் வெற்றியானது எங்களுடைய பாடசாலைக்கு மட்டுமன்றி நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்த வெற்றியெனவும் குறித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட ஆசிரியர் திரு.கைலாஸ் நவீன் தெரிவிக்கையில், ஆரம்பம் முதல் இம்மாணவர்கள் மத்தியில் திறமைகள் அதிகமாக காணப்பட்டதோடு நாங்கள் வழங்கிய ஆலோசனையை பின்பற்றினார்கள். அத்தோடு அவர்களுக்கு தேவையான விடயங்களை குறித்து தேடல்களிலும் ஈடுபட்டார்கள். ரோபோவை உருவாக்க நேரம், காலம் பாராமல் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மாணவர்கள் மத்தியில் இருக்கின்ற திறமைகளை இணங்கண்டு ஊக்கப்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.இந்த வெற்றியை பெற ஆசிரியர்கள் மற்றும் அதிபர், பெற்றோர்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆஸி செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:37.58 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்து கொண்டிருந்த போது, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் படகுடன் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு படையினர் இந்த படகை கைது செய்தனர்.
படகில் இருந்த 37 பேர் தற்போது இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 சிறார்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மாரவில, சிலாபம் மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZnx3.html

Geen opmerkingen:

Een reactie posten