தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

ராஜபக்ச வெற்றிபெற வேண்டுமென்று நரேந்திர மோடி வாழ்த்து! கருணாநிதி கண்டனம்!

அஸ்வரின் நாடாளுமன்ற இடத்தை ஏற்றுக்கொள்ள அமீர் அலி மறுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:02.55 PM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வரின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்காக தம்மை நியமித்தமையை கிழக்கு மாகாணசபை சபை உறுப்பினர் அமீர் அலி ஏற்க மறுத்துள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், தம்மால் குறித்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று அமீர் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே அமீர் அலி உட்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பேர் கிழக்கு மாகாண அரசாங்கத்தில் இருந்து விலகி சுயமாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே அந்தக்கட்சியினரை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள ஏ.எச்.எம்.அஸ்வரை பதவி விலகக் கோரப்பட்டது. எனினும் இதற்கு இடையில் பொதுபலசேனா தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.
இதேவேளை பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞானத்தை பார்த்த பின்னரே தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் ஏ.வை.எஸ்.ஹமிட் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt1.html

ஜனாதிபதி அவர்களே நான் உங்களை எதிர்க்கவில்லை! பிரச்சார மேடையில் மைத்திரிபால
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:14.34 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம், ஊழல், வீண்விரயம் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவே தான் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் பொது வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல கட்சிகளை இல்லாமல் செய்து விடுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவையில் இன்று தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே நான் உங்களை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. உங்கள் குடும்பத்தை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை.
நாட்டில் அதிகரித்துள்ள இலஞ்சம், ஊழல், வீண்விரயம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றையே நான் எதிர்க்கின்றேன்.
மகிந்த ராஜபக்ஷ நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழிக்க தயாராகி வருகிறார். அவர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் தரைமட்டமாக்கி விடுவார்.
நான் அனைத்தையும் அறிந்திருக்கின்றேன். எனக்கு தெரிந்த விடயங்களை நான் எதிர்காலத்தில் கூறுகிறேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தமது உயிரையும் அர்ப்பணிக்க தயார்- மைத்திரிபால
பொலன்நறுவை மக்களுக்காக தமது உயிரை அர்பணிக்க தயார் என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் இன்று மைத்திரிபாலவின் முதலாவது பிரசாரக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதன்போது உரையாற்றிய மைத்திரிபால,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கம் இலங்கை மக்களுக்காக எதனை செய்தது என்று கேள்வி எழுப்பினார்.
மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாhதிபதியானால் அவர் ஒரு சர்வதிகாரியாகவே மாறுவார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் பதவிக்கு வந்தால் விவசாயிகளின் ஒய்வூதியத்தை உயர்த்தப்போவதாக குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர். எனினும் அரசாங்கம் தம்மீது புலிமுத்திரைக்குத்த முயற்சிப்பதாக மைத்திரிபால தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் ஊவா மாகாணசபை, எதிர்க்கட்சியின் கைக்குள் வந்துவிடும் என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt2.html

ராஜபக்ச வெற்றிபெற வேண்டுமென்று நரேந்திர மோடி வாழ்த்து! கருணாநிதி கண்டனம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 01:59.26 PM GMT ]
ராஜபக்ச எப்படிப்பட்ட இனப் படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. அவரே திரும்ப வெற்றிபெற வேண்டுமென்று நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் இன்று ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- இலங்கை அதிபர் ராஜபக்ச வெற்றிபெற வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர்:-  கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில எதிர்க் கட்சிகள் இதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ராஜபக்ச எப்படிப்பட்ட இனப் படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அவரே திரும்பப் பதவிக்கு வர வேண்டுமென்பது, அரசு அலுவலகங்களில் குற்றவாளியின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவும், ராஜபக்ச புரிந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பது போலவும்தான் இருக்கும்!
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt0.html

Geen opmerkingen:

Een reactie posten