தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

மாவீரர்கள் உத்தமமானவர்கள்! அவர்களை அனைவரும் மதிக்க வேண்டும்!

அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மைத்திரிக்கு ஆதரவு வழங்குவார்?
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 06:19.17 AM GMT ]
கொழும்பு மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்கு கொண்ட அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரியவருகிறது.
ஜீவன் குமாரதுங்க, கொழும்பில் உள்ள மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான சமிந்த சிறிசேன பொலனறுவையில் ஊடகவியலாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீவன் குமாரதுங்க பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆளும் கட்சியில் இருந்து 30 பேர் விலகி, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் சமிந்த சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியிருந்த போதிலும் மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க எந்த பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ளவில்லை எனவும் அந்த தகவலில் எந்த உண்மையுமில்லை எனவும் குமாரதுங்கவின் ஊடக செயலாளர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள நடிகரான ஜீவன் குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவரும், இலங்கை மக்கள் கட்சியின் தலைவருமான விஜய குமாரதுங்கவின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq7.html
மாவீரர்கள் உத்தமமானவர்கள்! அவர்களை அனைவரும் மதிக்க வேண்டும்
[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 06:23.50 AM GMT ]
இன்று நவம்பர் 27. தமிழ் மக்களைப் பொறுத்த வரை இன்றைய நாள் ஒரு புனிதமான தினம்.
உரிமைப் போராட்டத்திற்காக மரணமடைந்த தியாகிகளை நினைவு கூருகின்ற இந்த நாளை இலங்கை அரசும் தென்பகுதி மக்களும் வித்தியாசமான கண் கொண்டு பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது.
மாவீரர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவோ அல்லது சிங்கள மக்களுக்கு வீம்பாகவோ போராடவில்லை.
அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வுக்காக, விடுதலைக்காக போராடியவர்கள்.  எனவே, அவர்களைத் தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.
இன்னொருவரின் வாழ்வுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்வதென்பது சாதாரணமானதன்று. அதற்குள் இருக்கக் கூடிய விடுதலை உணர்வு, மண்பற்று, மக்கள் மீது கொண்ட பாசம் என்பன அளவிடற்கரியன. அத்தகையதொரு தியாகத்தை செய்தவர்களே மாவீரர்கள்.
இவர்கள் எல்லா உரிமைகளும் கிடைத்த நிலையில் ஒரு போராட்டத்தை நடத்தியவர்கள் அல்ல.
மாறாக இந்த மண்ணில் காலாகாலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர். அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. இடையிடையே இனக்கலவரங்களைத் தோற்றுவித்து தமிழ் இனம் அழிக்கப்பட்டது.
இத்தகையதொரு கொடூரமான சூழ்நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் போராட முற்பட்டனர்.
தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசுகள் நடுநிலையோடு நோக்கியிருந்தால் மாவீரர்கள் என்பதற்கோ, மாவீரர் தினம் என்பதற்கோ சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கமாட்டாது.
தமிழ் இளைஞர்களின் நியாயமான போராட்டத்தை முறியடிக்க முற்பட்டு, முப்பது ஆண்டு கால யுத்தத்தை இலங்கைத் திருநாடு சந்தித்தது.
எத்தனையோ மனித இழப்புகள், சொத்தழிப்புகள், வேதனைகள், துன்ப துயரங்கள் என எங்கும் இருள் மயமாகின.
இறுதியாக 2009 மே மாதத்தில் நடந்த மிகக் கொடூரமான யுத்தத்தில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டனர்.
சிங்கள, தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கைகள் அறுந்து போயின.
எத்தனை ஆறுதல்கள் கூறினாலும் போரில் அகப்பட்டவர்கள், உறவுகளை இழந்தவர்கள் ஒரு போதும் இந்தக் கொடூரத்தை மறக்க மாட்டார்கள்.
யுத்தம் செய்து ஒரு போராட்ட அமைப்பை முறியடித்து விட்டோம் என்று நினைக்கலாம். ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டின் ஒரு பகுதி மக்கள் ஒரு போதும் தங்களுக்கு நடந்த நிட்டூரத்தை மறக்க மாட்டார்கள் என்பதுடன் அந்தக் கொடூரத்தின் வடுக்களை வரலாறுகளாக்கி அதையே தங்களின் விடியலுக்கான விதையாக்கிக் கொள்வர் என்பது உலக வரலாறும் அனுபவமுமாகும்.
ஒரு விடுதலைப் போராட்டம் முடிவுறுவது என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்பிற்கும் வெற்றியாக அமைய வேண்டும். அந்த வெற்றி நாட்டுக்கான வெற்றியாக இருக்கும்.
எனினும் இது பற்றி நம் நாட்டு ஆட்சியாளர்கள் சிந்தித்திலர். அத்தகையதொரு சிந்தனை இருந்திருக்குமாயின் மாவீரர்களை இந்த நாட்டின் போர்வீரர்களாக மாற்றியிருப்பார்கள்.
தம் இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரான வீரர்களை நாட்டின் போர் வீரர்களாக திசை மாற்றும் போது அவர்களிடம் இருக்கக் கூடிய விசுவாசமும் நாட்டுப் பற்றும் எங்கள் நாட்டின் மேன்மைக்கும் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்கும் பேருதவியாக அமைந்திருக்கும்.
எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாத பேரினவாதம் உரிமை கேட்டவர்களை பயங்கர வாதிகளாகப் பார்த்துக் கொண்டது.
இதனால் மிகச் சிறந்த வீரர்களை இந்த நாடு இழந்து போனது. அந்த இழப்புகளை ஈடுசெய்வது முடியாத காரியமாயினும் விட்ட தவறைத் திரும்பத் திரும்ப செய்யாமல் மாவீரர்களுக்குரிய கெளரவத்தை, மரியாதையை வழங்க இலங்கை ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
துட்டகைமுனுவின் பரம்பரை என்று கூறுவதில் பெருமை உண்டு என தென்பகுதி நினைக்குமாயின் மாவீரர்களுக்கு வணக்கம் செய்வதில் எந்தத் தடையும் தடுப்பும் தேவையில்லை என்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnry.html

Geen opmerkingen:

Een reactie posten