[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 01:32.59 PM GMT ]
சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஆறு தொகுதி அமைப்பாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து கோடிகளை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து்ச் செல்கின்றது. இதனைத் தடுக்க வழியறியாது ஆளும்கட்சி திகைத்துப் போயுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் சாதாரண கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை ஆளுங்கட்சிக்கு இழுத்து ஊடகங்களில் ஷோ காட்ட அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர்கள் சிலரை அரசாங்கத்துக்கு கட்சி தாவ வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த ஆறு தொகுதி அமைப்பாளர்களுக்கு சில லட்சங்கள் வரை அட்வான்ஸ் தொகை தரப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று அவர்கள் சஜின் வாஸ் எம்.பி.யின் அலுவலகத்துக்கு வந்து மீதித் தொகையை பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உடன்பாட்டின் பிரகாரம் குறித்த ஆறு தொகுதி அமைப்பாளர்களும் இன்று சஜின் வாஸ் குணவர்த்தனவின் அலுவலகம் வந்துள்ளனர்.
எனினும் அவர்கள் வருவதற்கு முன்னரே சஜின் வாஸ் அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர். இதனைக் கண்டதும் அங்கு வந்த சரத் பொன்சேகா கட்சியினர் கோபத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
ஆளுங்கட்சிக்கு இணைவதற்கு சம்மதம் தெரிவித்து வந்தவர்கள் இடைநடுவில் திரும்பிப் போன சம்பவம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmx5.html
சுவிஸ்- தூண் நகரசபைத் தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க தமிழீழ அரசாங்கம் அறைகூவல்!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 01:48.14 PM GMT ]
சுவிஸ் - தூண் நகரசபைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமைகள் ஊடாக அதிகளவிலான தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
எதிர்வரும் 30ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள சுவிஸ் - தூண் நகரசபைத் தேர்தலில், ஈழத்தவரான தர்சிகா கிருஸ்ணநாதம் அவர்கள் போட்டியிடுகின்ற நிலையில், நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் இந்த அறைகூவல் வெளிவந்துள்ளது.
புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுகின்ற உள்நாட்டுத் தேர்தல்களில், அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்கின்ற ஈழத்தவர்கள், தங்களுக்குரிய வாக்குரிமைகள் பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏலவே நிறைவேற்றப்பட்டுள்ள தொடர்பிலும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சனநாயக வழிமுறை தழுவிய இன்றைய ஈழ விடுதலைப் போராட்டத்தின் மென்வலுவில், புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் முக்கியமானதொன்றாக மாறிவரும் நிலையில், அந்தந்த நாடுகளில் இடம்பெறுகின்ற தேர்தல்களில் பங்கெடுப்பதானது புலம்பெயர் தமிழர்களின் சமூக அரசியல் அடையான இருப்புக்கு வளமுள்ளதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmx6.html
Geen opmerkingen:
Een reactie posten