தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 november 2014

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்! மகிந்தவுக்கே ஆதரவு!- அமைச்சர் மில்ரோய்!

சுபநேரத்திலும் சோதிடத்திலும் நம்பிக்கை கொண்ட இலங்கை
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 12:03.27 PM GMT ]
சோதிடத்தின் பிறப்பு இந்திய தேசமாயினும் அதன் வளர்ப்பு இலங்கை என்று சொல்லலாம் அந்தளவிற்கு சோதிடத்தின் மீதான நம்பிக்கை இலங்கையின் ஆட்சிப் பீடங்களில் மிகப்பெரிய ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன.
இலங்கை வேந்தன் இராவணன் முதல் இப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ வரை சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ சோதிடர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டார்.
அவர் ஒரு முறை பொது மேடையொன்றில் உரையாற்றுகையில், நான் பிறந்த போது எனது தந்தையார் எனது ஜாதகத்தை ஒரு சோதிடரிடம் காட்டினார்.
ஜாதகத்தைப் பரிசீலித்த சோதிடர் இந்தக் குழந்தை ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆட்சி புரிவான் என்று கூறினார்.
எனினும் எனது தந்தை அதை நம்பவில்லை எங்களின் குடும்ப சமூக நிலைமையே அந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருந்தது.
சோதிடரின் வாக்கை எனது தந்தையார் மறுதலித்தார் எனினும் சோதிடர் விடுவதாக இல்லை.
குழந்தை பிறந்த நேரம் இது எனில் அந்தக் குழந்தை இந்த நாட்டை நிச்சயம் ஆள்வான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இதை பிரேமதாஸ மேடையில் கூறும் போது இந்த நாட்டின் ஜனாதிபதியாகவிருந்தார். பிரேமதாஸவிற்கு காலம் அதிகம் நல்லதல்ல என்று சோதிடர்கள் கூறியதன் காரணமாக அவர் வெளிநாட்டுப் பயணங்களை முற்றுமுழுதாக தவிர்த்து வந்தார்.
வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டால் ஆபத்து ஏற்படலாம் என்ற அடிப்படையிலேயே ஆர்.பிரேமதாஸ இவ்வாறு நடந்து கொண்டார். எனினும் உள்நாட்டிலேயே அவரது உயிர் பறிக்கப்பட்டது.
இலங்கை வேந்தன் இராவணன் மிகப்பலம் பொருந்தியவன் அவன் பிறந்த நேரம் கிரக பலன்கள் மிகவும் பலமாக இருந்தன எனினும் மூவுலகையும் ஆள வேண்டும் என்பது அவனின் ஆசையாக இருந்தது.
தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நாரத முனிவரை இராவணன் நாடினான். இராவணனின் அரண்மனை வாயிலில் எட்டாவது படியில் முகம் குப்புறக்கிடக்கும் சனீஸ்வரனை நிமிர்த்தி விட்டால் உனக்கு மூவுலகையும் ஆளும் அருமை கிடைக்கும் என்றார் நாரதர்.
நாரதர் கூறியதை ஆராயாமல் மூவுலகையும் ஆள வேண்டும் என்ற ஆசையில் எட்டாம் படியிலிருக்கும் சனீஸ்வரனை நிமிர்த்தி விட அட்டமத்துச் சனியின் பார்வை இராவணன் மீது விழுகிறது.
அதன்பின் சூர்ப்பனகை மூக்கறுபடுகிறாள். இராவணன் சீதையை சிறையிலிருத்த, இராமர் இலங்கைத் தீவு மீது போர் தொடுக்கிறார்.
அனுமன் நாட்டை எரிக்கிறான். கூட இருந்த விபீஷணன் எதிர்த்தரப்புக்குச் செல்கிறார். கும்பகர்ணன் மாண்டு போகிறான். இருந்த பலனையும் இழந்து இலங்கை வேந்தன் உயிர் துறந்து போனான் என்று அறிகிறோம்.
எனினும் இவையெல்லாம் சோதிடத்தின் மீது கொண்ட அந்த நம்பிக்கையால் ஏற்பட்ட நாசங்கள் என்பதை உணர எவருமில்லை என்றாகி விட்டது.
இவை ஒருபுறமிருக்க ஜனாதிபதி ராஜபக்ச­ தேர்தல் உள்ளிட்ட எந்த முக்கியமான நிகழ்வுகளையும் எட்டாம் நம்பரிலேயே செய்து வருவதை காண முடியும்.
எட்டாம் நம்பர் அவருக்கு அத்துணை பொருத்தம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கூட எட்டாம் நம்பரிலேயே நடக்கவிருக்கிறது. நம்பர் பொருத்தம் சரியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ புதிய படிவத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக சுபநேரத்தை பார்ப்பதில் மிகக் கவனமாக இருந்தார்.
சோதிடர்கள் வகுத்துக் கொடுத்த சுப நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பில் மகிந்த ராஜபக்­ச ஒப்பமிட்டார்.
அவர் ஒப்பமிட்டு ஒருசில தினங்களில் அவரோடு இருந்த மைத்திரிபால சிறிசேனவே தனது எதிர் வேட்பாளர் என்ற அதிர்ச்சியான செய்தி ஜனாதிபதிக்குக் காத்திருந்தது.
அதிர்ச்சியான செய்தியோடு முடிவுகள் முற்றுப் பெறுவதில்லை. தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருக்கலாம்.
ஆயினும் இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் சோதிடம் கொண்டுள்ள வகிபாகம் மிகவும் உயர்வானது என்பதை மட்டும் இப்போதைக்கு கூறிக்கொள்ள முடியும்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmx1.html
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்! மகிந்தவுக்கே ஆதரவு!- அமைச்சர் மில்ரோய்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 12:28.43 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாத ஒன்று என சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட ஸ்ரீ.ல.சு.க. வின் தொழிற்சங்க நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஜனாதிபதிப் பதவி நல்ல ஒருவரிடம் கிடைத்தால் அது சிறந்தது. கெட்ட ஒரு மனிதரிடம் கிடைக்கப் பெற்றால் அது மிகவும் மோஷமானது.
இலங்கையைப் போன்ற ஒரு நாட்டிற்கு இந்த முறைமை கொஞ்சமும் பொருத்தமற்றது. இதனை நீக்க வேண்டும் என்பதில் நுாற்றுக்கு நுாறு வீதம் நான் உடன்படுகின்றேன்.
தமது கட்சியினராலேயே எமது கட்சிக்கு சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
எந்தப் பிரச்சினை இருந்தாலும் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு உழைக்கப் போவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmx2.html

Geen opmerkingen:

Een reactie posten