பிரித்தானியாவின் வெளியுறவு விவகார பொதுச்சபைக்குழு நேற்று பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய போதும் அதனை இலங்கை நிராகரித்துள்ளது.
இந்தநிலையில் பொருளாதார தடை உட்பட்ட பொருத்தமான எதிர்நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் ஆராய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்காது போனால், ஐரோப்பிய பங்காளிகளுடன் பேசி ஜிஎஸ்பி வரிச்சலுகையை ரத்து செய்வது உட்பட்ட எதிர்நடவடிக்கைகளை இலங்கை தொடர்பில் எடுக்குமாறு குறித்த குழு, நேற்று கையளித்த அறிக்கையில் கேட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு மக்களின் ஆதரவை பெற்றுக்கொடுக்க புதிய இந்திய அரசாங்கத்துக்கு ஊக்கம் அளிக்குமாறும் குழு பிரித்தானிய அரசாங்கத்திடம் பரிந்துரைத்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு விவகார பொதுச்சபைக்குழு, அரசாங்கம், எதிர்க்கட்சி உட்பட்டவர்களின் 11 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq1.html
Geen opmerkingen:
Een reactie posten