தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

அமெரிக்காவில் கொழுந்து விட்டெரியும் இனவாத வன்முறை! உலகிற்கு தெரியவரும் நிறவாதம்!



அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஒருவரின் கொலை தொடர்பாக கடந்த வாரம் வழங்கப்பட்ட தீர்ப்பு அமெரிக்காவில் நிறவாதம் தலைத்தோங்கி நிற்கிறது என்ற சர்வதேச ஊடகங்களின் கண்டனத்திற்கு உள்ளானது.
இது தொடர்பாக லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 09ம் திகதி மைக்கல் பிரவுன் என்ற 18 வயது கறுப்பின இளைஞர் வெள்ளையினப் பொலிஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த இளைஞர் கைகளை உயர்த்தியபடி நின்ற போதே 7 முறை சுடப்பட்டு கொல்லப்பட்டார் என்பது தான் பிரச்சினைக்கான காரணம்.
பெர்குசன் நகரில் 67 வீதமானவர்கள் கறுப்பர்கள், 29 வீதமானவர்கள் வெள்ளையர்கள், 4 வீதமானவர்கள் ஏனையவர்கள்.
குறித்த கொலைச் சம்பவத்தினை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட யூரர்கள் சபையில் 9 பேர் வெள்ளையர்களாகவும், 3 பேர் கறுப்பினத்தவர்களாகவும் இருந்தனர்.
இது அந்த நகரத்தைப் பொறுத்தவரை ஒரு இனச்சமன்பாடற்ற நியமனம் என்ற விமர்சனத்தைப் பலரும் முன்வைத்தனர்.
இன்றுவரை நீதித்துறையின் தீர்ப்புப் பிழையானது என்பதே பொலிஸாருக்கெதிரான வன்முறையாகத் திரும்பியிருந்தது.
அதேவேளை பொலிசாருக்கு ஆதரவாகவும் வெள்ளையருக்கு ஆதரவாகவும் வெள்ளையினத்தவரும் ஊர்வலங்களை நிகழ்த்தினர் என்பது உள்ளிட்ட மேலும் பல தகவல்களை அவர் பகிந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZls6.html

Geen opmerkingen:

Een reactie posten